இன்றைய ராசி பலன்

நிதானமான செயல்பாடுகள் நன்மையை ஏற்படுத்தும்-இன்றைய ராசிபலன்;நவம்பர் 26, 2026.

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்

நவம்பர் 26

கிழமை: வியாழக்கிழமை

தமிழ் வருடம்: பராபவ ஆண்டு

தமிழ் மாதம்: கார்த்திகை

நாள் : 10

ஆங்கில தேதி : 26

மாதம் : நவம்பர்

வருடம் : 2026

நட்சத்திரம்: இரவு 10.00 மணி வரை மிருகசீரிஷம். பின்னர் திருவாதிரை.

திதி: மாலை 4.59 மணி வரை துவிதியை. பின்னர் திரிதியை.

யோகம்: மரண யோகம்.

நல்ல நேரம்:காலை 10.45 – 11.45, மாலை 12.15 – 1.15

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

கௌரி நல்ல நேரம்: மாலை 6.30 – 7.30

சூலம்: தெற்கு.

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

மேஷம்

உங்களுடைய நல்லெண்ணமும் உதவும் மனப்பான்மையும் பாராட்டுகளைப் பெற்றுத்தரும். எதிர்பாராத ஒரு நிகழ்வு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவதால் சிறந்த முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கலாம். குடும்பத்தில் சுபமான செய்தி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து எதிர்காலத் தேவைகளைப் பற்றித் திட்டமிடுவீர்கள். பெண்களுக்கு விரும்பிய காரியங்களைச் செய்து முடிக்கும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்துவார்கள். ஆன்மிகப் பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு நிறைவைத் தரும். வருமானத்தைப் பெருக்குவதற்கான சிந்தனைகள் உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.

ரிஷபம்

எதிர்காலத்தைப் பற்றிய புதிய நம்பிக்கைகள் மனதில் வேரூன்றும். இதுவரை கிடைக்காமல் இருந்த ஒரு வாய்ப்பு மீண்டும் உங்கள் வாசல் தேடி வரலாம். பணிபுரியும் இடத்தில் தனித்துவமான அணுகுமுறையால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீட்டாளர்களைச் சந்திக்கும் சூழல் உருவாகும். உங்களுடைய உழைப்பை மற்றவர்கள் உணர்ந்து மதிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி பரிமாறப்படும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் தங்களுடைய திறமைகளைப் புதிய வழிகளில் வெளிப்படுத்துவார்கள். பழைய நண்பரின் சந்திப்பு மனதிற்கு உற்சாகம் அளிக்கும். பொருளாதாரத்தில் படிப்படியான உயர்வு தென்படும். தேவையான நேரத்தில் சரியான முடிவெடுப்பது வெற்றியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீல நிறம்.

மிதுனம்

நிதானமான செயல்பாடுகள் நன்மையான விளைவுகளை ஏற்படுத்தும். பிறரிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதால் மனச்சுமை குறையும். அலுவலகத்தில் உங்களுடைய பொறுப்புகள் விரிவடையலாம். தொழில் செய்பவர்கள் புதிய விற்பனை வாய்ப்புகளை உருவாக்குவார்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய ஆலோசனைகள் நடைபெறும். வாழ்க்கைத்துணையின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பீர்கள். மாணவர்கள் தங்களுடைய பலவீனங்களைச் சரிசெய்து முன்னேறுவார்கள். சொத்து சம்பந்தமான ஆவணங்களைச் சரிபார்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய அறிமுகங்கள் கிடைக்கும். வரவுக்கேற்ற செலவுகளை அமைத்துக்கொண்டால் நிம்மதி நிலைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.

கடகம்

உங்களுடைய அறிவுத்திறன் புதிய பாதைகளைத் திறந்து வைக்கும். எதிர்பாராத சந்தர்ப்பத்தில் முக்கியமான ஒருவருடைய அறிமுகம் கிடைக்கலாம். பணியிடத்தில் மற்றவர்கள் முடிக்கத் தயங்கிய பணியைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய முயற்சிகளுக்கு இப்போது நல்ல விளைவு கிடைக்கும். குடும்பத்தில் உங்களுடைய கருத்துக்கு ஆதரவு பெருகும். உறவினர்களிடையே இருந்து வந்த இடைவெளி குறையும். மாணவர்கள் புதிய பாடங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள். பெண்களுக்கு தனிப்பட்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிறிய தொகைகளாக இருந்தாலும் சேமிப்பைத் தொடர்வது பயனளிக்கும். வெளியூர் பயணங்கள் தொடர்பான திட்டங்கள் உறுதியாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.

சிம்மம்

உங்களுடைய பொறுமை பலனளிக்கும் தருணங்கள் உருவாகும். ஒரு முக்கியமான விஷயத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தெளிவு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் பொருட்களின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கலாம். கலைஞர்களின் படைப்புகள் பாராட்டைப் பெறும். மாணவர்களுக்கு நினைத்த இலக்கை நோக்கிச் செல்லும் உற்சாகம் பிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் எழுத்துப்பூர்வமான ஆதாரம் வைத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.

கன்னி

உங்களுடைய செயல்களில் வேகம் மட்டுமின்றி விவேகமும் வெளிப்படும். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு திறம்படச் செயல்படுவீர்கள். அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை இலக்கை நெருங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெண்களுக்கு சமூகத் தொடர்புகள் மூலம் ஆதாயம் ஏற்படலாம். மாணவர்கள் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்துவார்கள். உறவினர்களின் வருகையால் இல்லத்தில் கலகலப்பு உண்டாகும். பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகளை ஆராய்வீர்கள். கோபத்தைவிட பொறுமைக்கு முதலிடம் கொடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.

துலாம்

செயல்களை ஒழுங்குபடுத்தி முன்னேறுவதால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் திறமைக்குப் பொருத்தமான பணிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். பணியிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து செயல்படுவது நன்மை தரும். வியாபாரத்தில் கணிசமான முன்னேற்றம் காணப்படும். புதிய பொருட்களை அறிமுகப்படுத்தும் முயற்சி வரவேற்பைப் பெறும். குடும்பத்தில் பழைய பிரச்சினை ஒன்றுக்கு சுமுகமான முடிவு கிடைக்கலாம். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த திட்டமிடல் நடைபெறும். மாணவர்கள் எழுத்துத் திறனில் மேம்பாடு காண்பார்கள். பெண்களுக்கு விரும்பிய பொருளை வாங்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். உடல் நலனில் அலட்சியம் வேண்டாம். பணத்தைச் சேமிப்பதில் புதிய ஒழுங்கைக் கடைப்பிடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் எந்த விஷயத்திலும் அவசரமாக முடிவெடுக்காமல் சற்று யோசித்து செயல்படுங்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். முக்கிய ஆவணங்களை சரிபார்த்து கையாள்வது அவசியம். தொழிலில் புதிய முதலீடு தொடர்பான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. வியாபாரத்தில் வரவு தாமதமானாலும் நிலைமை கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத செலவு ஒன்று வரலாம். பணத்தை பிறருக்காக செலவிடும் முன் உங்கள் தேவைகளை கவனியுங்கள். குடும்பத்தில் ஒருவரின் பேச்சை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். தம்பதியரிடையே சிறிய கருத்து வேறுபாடு வந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் மனதை அமைதிப்படுத்தி படித்தால் நல்ல பலன் கிடைக்கும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை நிறம்.

தனுசு

உங்களுடைய துணிச்சலான அணுகுமுறை பல இடங்களில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும். முடிவெடுக்க முடியாமல் இருந்த ஒரு விஷயத்தில் தெளிவான தீர்மானத்திற்கு வருவீர்கள். அலுவலகத்தில் உங்களுடைய அனுபவம் மதிக்கப்படும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களை இணைக்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான உரையாடல்கள் நடைபெறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் தங்களுடைய விருப்பமான பணிகளை நிறைவேற்றுவார்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதால் முன்னேற்றம் பெறுவார்கள். பண வரவு இருந்தாலும் கடன் கொடுப்பதில் எச்சரிக்கை அவசியம். பழைய மனக்கவலை ஒன்றிலிருந்து விடுபடும் வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.

மகரம்

கடினமான சூழல்களையும் திறமையாகக் கையாளும் ஆற்றல் அதிகரிக்கும். இதுவரை செய்த முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பணியிடத்தில் முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்படலாம். வியாபாரத்தில் லாபத்தை உயர்த்துவதற்கான புதிய வழிகள் புலப்படும். குடும்பத்தில் பொருளாதார ரீதியான ஆலோசனைகள் நடைபெறும். வீடு, மனை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடையும். பெண்களுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்ட இலக்குகளை நோக்கி உறுதியுடன் பயணிப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும் வாய்ப்பு உண்டு. தேவையற்ற கவலைகளைக் குறைத்து செயல்களில் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மயில்நீலம்.

கும்பம்

உங்களுடைய புதுமையான சிந்தனைகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இதுவரை பழக்கமில்லாத ஒரு துறையில் ஆர்வம் பிறக்கலாம். பணிபுரியும் இடத்தில் புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இளையவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். நண்பர்களின் ஆலோசனை புதிய பாதையைக் காட்டும். கலைஞர்களுக்கு படைப்புகளைப் பிரபலப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். பொருளாதாரத்தில் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுப்பீர்கள். உடல் சோர்வு ஏற்படாமல் பணிகளுக்கு இடையில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு நிறம்.

மீனம்

மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களைச் செயலாக்குவதற்கான சூழல் அமையும். நீண்ட நாட்களாகத் தள்ளிவைத்த ஒரு முயற்சியைத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய பங்களிப்பு கவனிக்கப்படும். வியாபாரத்தில் புதிய விற்பனைத் தொடர்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று திறமையை நிரூபிப்பார்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் நிலை இருக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் சந்திப்பு நிகழும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.

SCROLL FOR NEXT