இன்றைய ராசி பலன்

ராசிபலன் (27.06.2026): இன்று மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை : சனிக் கிழமை

தமிழ் வருடம்: பராபவ

தமிழ் மாதம்: ஆனி

நாள்: 13

ஆங்கில தேதி: 27

மாதம்: ஜுன்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று முழுவதும் அனுஷம்

திதி: இன்று அதிகாலை 12-32 வரை துவாதசி பின்பு திரயோதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 07-45 to 08-345

நல்ல நேரம்: மாலை 4-45 to 5-45

ராகு காலம்: காலை 9-00 to 10-30

எமகண்டம்: மாலை 1-30 to 3-00

குளிகை: காலை 6-00 to 7-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-45 to 11-45

கௌரி நல்ல நேரம்: மாலை 9-30 to 10-30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: அஸ்வினி, பரணி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளால் மனநிறைவு ஏற்படும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சோர்வு குறையும்.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

பயணங்கள் பயனளிக்கும். புதிய அறிமுகங்கள் உருவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்கலாம். மூத்தோரின் ஆலோசனை பயனளிக்கும். வழக்குகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும்.

மனதில் இருந்த குழப்பம் விலகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில் தரிசனம் மன அமைதியை தரும். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

கடகம்

வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். நல்ல செய்தி ஒன்று வந்து சேரும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இன்று அமைதியான மனநிலையுடன் செயல்படுவீர்கள். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

தொழிலில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.,புதிய முதலீடுகளில் கவனமாக இருங்கள். வருமானம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

சிம்மம்

இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். பிள்ளைகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும். அவர்களின் முன்னேற்றம் பெருமை சேர்க்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

உறவினர்களுடன் நல்லுறவு வளரும். உடல்நலம் சீராக இருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்

கன்னி

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். சிக்கல்கள் படிப்படியாக குறையும்.

ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். இறை வழிபாடு நன்மை தரும். வீண் கோபத்தைத் தவிர்க்கவும். பேச்சில் நிதானம் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

துலாம்

எதிர்பாராத வரவு கிடைக்கலாம். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. மகிழ்ச்சியான செய்தி மனநிறைவு தரும். நாள் வெற்றிகரமாக நிறைவடையும்.

இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றிப் பாதையில் செல்லும். தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகளில் சிக்கனம் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும். பிள்ளைகளின் செயலால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனை பயனளிக்கும். உடல்நலம் மேம்படும். மன அழுத்தம் குறையும்.மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

தனுசு

போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. பயணங்கள் நன்மை தரும். முக்கிய ஆவணங்களில் கவனம் செலுத்தவும். புதிய வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துங்கள். மூத்தோரின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

மகரம்

இன்று மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

செலவுகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு மனநிறைவு தரும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

கும்பம்

புதிய ஒப்பந்தங்கள் கைகூடலாம். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். சோர்வு குறைந்து சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். போட்டித் தேர்வில் நல்ல வாய்ப்பு உருவாகும். பயணங்கள் நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

மீனம்

புதிய அறிமுகங்கள் பயனளிக்கும். முக்கிய முடிவுகளில் தெளிவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மனக்குழப்பம் விலகும்.

இறை வழிபாடு மன அமைதியை தரும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பொறுமையுடன் செயல்படுங்கள். எதிர்பாராத நன்மை கிடைக்கலாம். மகிழ்ச்சியான செய்தி கேட்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்