இன்றைய ராசி பலன்

நல்ல வேலை கிடைக்கும்... இன்றைய ராசிபலன் (27.04.2026)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை திங்கட் கிழமை

தமிழ் வருடம் பரபாவ

தமிழ் மாதம் சித்திரை

நாள் 14

ஆங்கில தேதி 27

மாதம் ஏப்ரல்

வருடம் 2026

நட்சத்திரம் இன்று இரவு 11-33 வரை பூரம் பின்பு உத்திரம்

திதி இன்று இரவு 08-53 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம் சித்த யோகம்

நல்ல நேரம் காலை 6-00 to 7-00

நல்ல நேரம் மாலை 4-30 to 5-30

ராகு காலம் மாலை 7-30 to 9-00

எமகண்டம் காலை 10-30 to 12-00

குளிகை காலை 1-30 to 3-00

கௌரி நல்ல நேரம் காலை 09-30 to 10-30

கௌரி நல்ல நேரம் மாலை 7-30 to 8-30

சூலம் கிழக்கு

சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் சுய உதவிக்குழுவில் தலைமை தாங்குவர். குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. சில சமயம் தங்கள் சகோதரர் உதவுவார். மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

ரிஷபம்

தொழில் அதிபர்கள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். கலைஞர்களுக்கு சம்பளம் கூடும். தம்பதிகளிடையே இணக்கம் கூடும். உத்யோகஸ்தர்கள் தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். தேக ஆரோக்கியம் நன்கு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

மிதுனம்

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். அரசியல்வாதிகள் பொது கூட்டங்களுக்காக வெளியூர் செல்வீர்கள். வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். மாணவர்கள் நன்கு படிப்பர்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கடகம்

வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். பிள்ளைகள் நன்கு படிப்பர். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

சிம்மம்

அதிக விற்பனைக்காக மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை.வியாபாரத்தில் வரவு செலவுகளை சரிபார்ப்பது நல்லது. காதலர்களிடம் ஊடல்கள் வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கன்னி

புதிய பிரபலங்கள் அறிமுகமாவர். தம்பதிகளிடைலலயே ஒற்றுமை கூடும். நட்பால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுநலத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

துலாம்

ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள். சகோதரி வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

விருச்சிகம்

பணப் பிரச்சினை இருக்காது. வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள் .பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை. குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும். பிரபலங்கள் உதவுவர்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

தனுசு

பழைய நண்பரை சந்திப்பீர்கள். முகத் தோற்றம் பளிச்சிடும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

கும்பம்

வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைத்து, உடல் பொலிவினைக் கூட்டும்

அதிர்ஷ்ட நிறம் ரோஸ்

மீனம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும். வெளிநாடு பயணம் உறுதியாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.

பெண்கள் நகைகளில் முதலீடு செய்வர். ஒரு சிலர் புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். சகோதர வழியில் நன்மை உண்டாகும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்த வண்ணம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை