இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (02.06.2026): புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை : செவ்வாய்கிழமை

தமிழ் வருடம்: பராபவ

தமிழ் மாதம்: வைகாசி

நாள்: 19

ஆங்கில தேதி: 2

மாதம்: ஜுன்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று இரவு 09-53 வரை மூலம் பின்பு பூராடம்

திதி: இன்று மாலை 06-39 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 07-30 to 08-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: பிற்பகல் 3-00 to 4-30

எமகண்டம்: காலை 9-00 to 10-30

குளிகை: காலை 12-00 to 1-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: கிருத்திகை, ரோகிணி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். வேலையில் உள்ள சிக்கல் நீங்கும். வீடு வாங்க உகந்த காலம். தங்கள் பிள்ளைகளின் ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். நிர்வாகத் திறமையால் பதவி உயரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர். பயணங்களால் ஆதாயம் உண்டு. மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். காதல் கண் சிமிட்டும். உறவினர்கள் வருகை உண்டு. பிரபல பங்குச் சந்தை மூலம் பணம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

வேலையாட்களால் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வரவேற்பு அதிகரிக்கும். காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். பெற்றோரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும்.

அதிர்ஷட நிறம்: ஆரஞ்ச்

துலாம்

உயர்கல்வியில் வெற்றி உண்டு. புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பாகப்பிரிவினை சுமூகமாகும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாது. பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். பெரிய அளவில் பிரச்சினை இல்லை. அரசாங்க வேலை அனுகூலமாகும். பெண்களுக்கு சளி தொந்தரவு வந்து போகும். தங்கள் தொழிலில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதனால் வேலைச்சுமை அதிகமாகும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை. சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கும்பம்

கலைத்துறையினருக்கு தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். சிலருக்கு காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் முடியும். நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். கணவனிடம் வளைந்து கொடுத்துப்போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிரே