விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 24-ம் தேதி செவ்வாய்கிழமை
நட்சத்திரம்: இன்று அதிகாலை 2.21 வரை அனுஷம் பின்பு கேட்டை
திதி: இன்று பிற்பகல் 3.50 வரை பஞ்சமி பின்பு சஷ்டி
யோகம்: சித்த, அமிர்த யோகம்
நல்ல நேரம்: காலை 7.30 - 8.00, மாலை 4.30 - 5.30
ராகு காலம்: பிற்பகல் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: காலை 12.00 - 1.30
கௌரி நல்ல நேரம்: காலை 10.30 - 11.30, மாலை 7.30 - 8.30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: கிருத்திகை
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்
இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாள். உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும். நவீன வாகனம் வாங்க லோன் கிடைக்கும். இரவு நேர பயணத்தின்போது அதிக கவனம் தேவை. புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். வேலை தொடர்பான விஷயங்களில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
இன்று புதிய முயற்சிகளை தொடங்க நல்ல நேரம். தொழிலில் வளர்ச்சி பாதை திறக்கும். பணவரவு சீராக இருக்கும் ஆனால் செலவுகளும் கூடும். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் அதிபர்கள் முதலீட்டினை அதிகரிப்பர். மாணவர்களின் தேவை பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் தங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். முதலீடு செய்யும் முன் சிந்தியுங்கள். புதிய நண்பர்கள் சேர வாய்ப்பு உள்ளது. ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் அமைதியாக இருந்தால் சமாளிக்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
இன்று எடுத்த முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலன் தரும். தம்பதி உறவில் புரிதல் அதிகரிக்கும். எதிர்காலத்திற்கென சேமிக்க துவங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும். உடல்நலத்தில் தலைவலி அல்லது சோர்வு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
இன்று பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்க்கவும். விளையாட்டில் வெற்றி தொடரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். பணவிஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்கும் யோசனை வரலாம். உடல்நலம் சீராக இருக்கும் ஆனால் உணவில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
நண்பர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பயணம் நன்மையில் முடியும். நண்பர்களுடன் சந்திப்பு மகிழ்ச்சி தரும். காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். உங்கள் முயற்சி வெற்றியை தரும் நாள். மனதில் குழப்பங்கள் உண்டாகும். அதற்கு, உடற்பயிற்சி உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
இன்று உங்கள் அறிவுத்திறன் அதிகமாக செயல்படும். பேச்சுத்திறன் மூலம் பல காரியங்களை சாதிப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவீர்கள். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதை திறமையாக சமாளிப்பீர்கள். பணவரவு மிதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
இன்று செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். தாயின் உடல் நலம் சீரடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உடல்நலத்தில் சற்று கவனம் தேவை. மாணவர்களுக்கு இது நல்ல நாள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிறு தூர பயணம் வெற்றி தரும். தம்பதிகளிடையே அன்பு கூடும். பணவரவில் பங்கம் இல்லை. அரசியல்வாதிகளுக்கு புகழ் ஓங்கும். வழக்கு வெற்றி காணும். உடல்நலம் மேம்படும். பிரிந்திருந்த காதலர்கள் ஒன்று சேருவர். மாணவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
இன்று கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகும். தங்கள் சேமிப்பு உயரும். வியாபாரத்தில் போட்டிகளை பொடியாக்குவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் இருக்கும். தொழிலில் சற்று அழுத்தம் இருக்கும். பொறுமை அவசியம். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதம் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா