கிழமை: புதன்கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: பங்குனி
நாள்: 4
ஆங்கில தேதி: 18
மாதம்: மார்ச்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று காலை 06-08 வரை சதயம் பின்பு பூரட்டாதி
திதி: இன்று காலை 08-28 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை
யோகம்: அமிர்த, சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 09-30 to 10-30
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: மாலை 12-00 to 1-30
எமகண்டம்: காலை 7-30 to 9-00
குளிகை: காலை 10-30 to 12-00
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: மகம்
மேஷம்
விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். காதல் கசக்கும். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். நண்பர்கள் உண்மையாக இருப்பர். பணியாளர்களுக்கு, வேலைப்பளு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரிஷபம்
மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
வியாபாரம் செழிப்புறும். உடல் நலம் சிறக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். மகிழ்ச்சி பொங்கும். அழகு நிலையங்கள் வருவாயை அதிகரிக்கும். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். கணவன், மனைவி ஒற்றுமை இருப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கடகம்
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். தாய்வழி உறவினர்களிடம் மதிப்பு, மரியாதைக் கூடும். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கன்னி
வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வாராப் பணம் வரும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
துலாம்
சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சியை வெல்வீர்கள். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். பிள்ளைகள் தங்கள் சந்தேகங்களை பெற்றோரிடம் போக்கிக் கொள்வர். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்
மகரம்
தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். சுப காரியம் கைகூடும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கும்பம்
திடீர் பயணங்கள் வந்துப் போகும்.ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். கை, கால் வலி வந்துப் போகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
மீனம்
உத்யோகத்தில் மன நிம்மதி கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். கணவரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்