இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (20.03.2026): நினைத்த காரியம் வெற்றி பெறும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: வெள்ளிக்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: பங்குனி

நாள்: 6

ஆங்கில தேதி: 20

மாதம்: மார்ச்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று காலை 05-11 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

திதி: இன்று அதிகாலை 04-59 வரை பிரதமை பின்பு துவிதியை

யோகம்: அமிர்த யோகம்

நல்ல நேரம்: காலை 09-30 to 10-30

நல்ல நேரம்: மாலை 01-30 to 2-30

ராகு காலம்: காலை 10-30 to 12-00

எமகண்டம்: மாலை 3-00 to 4-30

குளிகை: காலை 07-30 to 09-00

கௌரி நல்ல நேரம்: காலை 12-30 to 1-30

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: உத்திரம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர். பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வெளியூர் பயணம் நேரிடும். எதிர்பார்த்த காரியம் வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

நல்ல வரண் கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாசிய பொருள்களை வாங்குவர். அரசு டென்டர் போன்றவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். தேகம் பொலிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

உத்யோகத்தில் உயர் பதவி கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. பயணங்களின் போது செல்போன் பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடகம்

வீட்டில் மனஅமைதி நிலவும். குடும்பத் தலைவிகளுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் தேறும். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். பெண்கள் கணவர் வீட்டாரிடம் இணக்கமாக செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் பாராட்டுவர். தொழிலுக்கு வங்கிக் கடன் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தின் மேல் கவனம் கொள்வது நல்லது. தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

தனுசு

நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

தொழில் சூடு பிடிக்கும். வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் நல்ல விற்பனைக்கு உள்ளாகும். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. பெற்றோர்கள் வேறு பள்ளியில் இடமாற்றத்திற்கு முயற்சி செய்வர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். பொதுபணிகளில் உள்ளவர்கள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். மாணவர்கள் படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

நினைத்த காரியம் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை