கிழமை: திங்கட் கிழமை
தமிழ் வருடம்: பராபவ
தமிழ் மாதம்: ஆனி
நாள்: 8
ஆங்கில தேதி: 22
மாதம்: ஜூன்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 03-35 வரை உத்திரம் பின்பு அஸ்தம்
திதி: இன்று இரவு 08-89 வரை அஷ்டமி பின்பு நவமி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 6-30 to 7-30
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: மாலை 7-30 to 9-00
எமகண்டம்: காலை 10-30 to 12-00
குளிகை: காலை 1-30 to 3-00
கௌரி நல்ல நேரம்: காலை 09-30 to 10-30
கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
இன்று பல நல்ல விஷயங்கள் நடைபெறும். உங்களின் திறமைகள் வெளிச்சத்திற்கு வரும். எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். சிந்தனைகள் செயலாக மாறும். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கான கதவுகள் திறக்கப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
புதிய முயற்சிகள் வெற்றி பெறும். சாதகமான நிகழ்வுகள் நடைபெறும். மன அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் தாங்கள் நினைத்த அளவுக்கு புதுப் புது ஆர்டர்கள் எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
புதிய பாதைகள் திறக்கப்படும். நல்ல எண்ணங்கள் நல்ல பலன்களை தரும். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் கிடைக்கலாம். அன்பானவர்களின் வார்த்தைகள் ஊக்கம் தரும். எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
உங்கள் செயல்களில் வேகம் அதிகரிக்கும். நல்ல செய்தி முழுவதும் உற்சாகம் தரும். வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் உற்சாகத்துடன் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். இன்று உங்கள் முகத்தில் புன்னகை மலரும் நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாராத நற்செய்தி மகிழ்ச்சியை தரும். புதிய வாய்ப்புகள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
எதிர்பார்த்த சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். மனதில் புதுப்புது நம்பிக்கைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம் நீலம்
புதிய அனுபவங்கள் வாழ்க்கையை வளப்படுத்தும். உழைப்பின் பலன் கண்முன்னே தெரியும். சிறு சவால்கள் எளிதில் சமாளிக்கப்படும். தடைபட்ட காரியங்கள் முன்னேறும். உங்கள் திறமைக்கு மதிப்பு கிடைக்கும். எதிர்காலம் பற்றிய கவலைகள் குறையும். புதிய இலக்குகளை அடைய திட்டமிடுவீர்கள்.வீட்டில் நிம்மதி கிடைக்கும். சிறிய மாற்றங்கள் பெரிய பலன்களை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
இன்று எடுக்கும் முயற்சி வீணாகாது. பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களின் பொறுமை பல சிக்கல்களை தீர்க்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
இன்று சாதகமான முடிவுகள் கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். வாகனம் ஓட்டும் போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
மனதில் இருந்த கவலைகள் குறையும். நல்ல நேரம் தொடங்கும் அறிகுறிகள் தெரியும். உங்களின் எண்ணங்கள் செயல்படும் நிலை உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு பலன் தரும்.
குடும்ப ஆதரவு பலமாக இருக்கும்.,பணவரவு அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
உங்களின் நேர்மையான அணுகுமுறை வெற்றியைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வு நடைபெறலாம். மன உற்சாகம் செயல்களில் பிரதிபலிக்கும். புதிய தொடர்புகள் எதிர்காலத்தில் நன்மை தரும். பணவரவில் தாமதம் இல்லை. பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா