இன்றைய ராசி பலன்

சேமிப்பு உயரும் நாள்... இன்றைய ராசிபலன் - 22.07.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை : புதன்கிழமை

தமிழ் வருடம் : பராபவ

தமிழ் மாதம் : ஆடி மாதம்

நாள் : 6

ஆங்கில தேதி : 22

மாதம் : ஜூலை

வருடம் : 2026

நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.21 மணி வரை சித்திரை, பின்னர் சுவாதி.

திதி : இன்று காலை 09.23மணி வரை அஷ்டமி, பின்னர் நவமி.

யோகம் : சித்த யோகம்.

நல்ல நேரம் காலை : 09.15 - 10.15

நல்ல நேரம் மாலை : 04.45 - 05.45

ராகு காலம் : நண்பகல் 12.00 - 01.30

எமகண்டம் : காலை 07.30 - 09.00

குளிகை : காலை 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 06.30 - 07.30

சூலம் : வடக்கு.

சந்திராஷ்டமம் : ரேவதி.

ராசிபலன்:-

மேஷம்

இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அமையும். குடும்பத்தில் இருந்த சிறிய மனக்கசப்புகள் விலகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். பணவரவு சீராக இருந்து மனநிம்மதியை அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மரகதப் பச்சை

ரிஷபம்

எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த ஒரு செயல் இன்று துவங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வீட்டு தேவைகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு உயர வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : கடல் நீலம்

மிதுனம்

வீட்டிற்கு விருந்தினர்கள் வருவர். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பேச்சில் நிதானம் கடைபிடிப்பதால் பல நன்மைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கை உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கடகம்

சொத்து தொடர்பான சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். தொழிலில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களின் ஆலோசனை பயனளிக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் பெருமையை அளிக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

பெண்களுக்கு வீட்டில் மரியாதையும் அவர்களது பேச்சுக்கு மதிப்பும் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலமான சூழ்நிலை உருவாகும். உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். பதவி உயர்வு தொடர்பான பேச்சு நடைபெறலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

அதிர்ஷ்ட நிறம் : தங்க நிறம்

கன்னி

பெரியவர்களின் உடல் நிலையை கவனித்து கொள்வது நல்லது. புதிய திட்டங்களை தைரியமாக செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழிலில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கைகூடும். உடல்நலத்தில் இருந்த சிறிய தொந்தரவுகள் நீங்கும். மாணவர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

துலாம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். சொத்து தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தம்பதியரிடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. நண்பர்களின் உதவி முக்கிய நேரத்தில் கிடைக்கும். மனநிறைவு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

விருச்சிகம்

துணிச்சலான முடிவுகள் வெற்றியைத் தரும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். எதிர்பாராத பயணம் நன்மை அளிக்கும். தொழிலில் புதிய வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பொருளாதார நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

தனுசு

பொறுமையுடன் செயல்பட்டால் நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வது நல்லது. இறைநம்பிக்கை மன உறுதியை அதிகரிக்கும். செலவுகளில் கட்டுப்பாடு அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தம்பதிகள் இடையே மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சேமிப்பு உயர்ந்து எதிர்கால நம்பிக்கை வலுப்படும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

தொழிலில் வளர்ச்சி மற்றும் லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனநிறைவைத் தரும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மீனம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்