இன்றைய ராசி பலன்

திருமண முயற்சி வெற்றி தரும்... இன்றைய ராசிபலன் (31.05.2026)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

மே 31

கிழமை: ஞாயிற்றுக்கிழமை

தமிழ் வருடம்: பராபவ

தமிழ் மாதம்: வைகாசி

நாள்:17

ஆங்கில தேதி: 31

மாதம்: மே

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று மாலை 04.46 வரை அனுஷம் பின்பு கேட்டை

திதி: இன்று பிற்பகல் 02.45 வரை பௌர்ணமி ,பின்பு பிரதமை.

யோகம்: மரண யோகம்

நல்ல நேரம் காலை: 07.30 - 8.30

நல்ல நேரம் மாலை: 3.30 - 4.30

ராகு காலம் மாலை: 4.30 - 6.00

எமகண்டம் காலை: 12.00 - 1.30

குளிகை காலை: 3.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 1.30 - 2.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: அஸ்வினி, பரணி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் பல காரியதடைகள் ஏற்படும். ஆகையால், புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

ரிஷபம்

திடீர் நற்செய்தி மனதிற்கு தெம்பளிக்கும். எந்த முடிவாக இருந்தாலும் தாங்களே முடிவெடுத்து செயல்படுவது நல்லது. நண்பர்களுக்கு உதவி செய்யும் நிலையில்தான் நீங்கள் இருப்பீர்கள். அவர்களும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள். மாணவர்கள் உயர் படிப்பு படிக்க வெளிநாடு செல்வர். பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மிதுனம்

கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். நண்பரிடையே வாக்குவாதம் வந்து போகும். விட்டுக்கொடுப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும். பங்குச் சந்தை லாபம் தரும். பிள்ளைகள் மேற்படிப்பை துவங்குவர். இடம் மனையால் லாபம் வரும். வேலையில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். உடல் நலம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கடகம்

புதிய நண்பர்கள் அறிமுகமாவர். அவர்களால் நன்மை விளையும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

பணப்பற்றாக்குறை வந்தாலும் கடைசியில் தேவையான நேரத்தில் எங்கிருந்தாவது பணம் வந்து சேரும். குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றைத் தடுக்க வேண்டும். திருமண முயற்சி வெற்றி தரும். கணவன் - மனைவியிடையே இருந்துவந்த பிணக்குகள் யாவும் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

கன்னி

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பற்று வரவு வசூலாகும். உடல் நலனில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும். கூட்டுத்தொழிலில் வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும். அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

கலைஞர்களுக்கு அரசியலிருந்து அழைப்பு வரும். கல்வித் தடை நீங்கும். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல் ஆரோக்கியம் தேறும். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

தனுசு

கொடுக்கல்–வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை குறையும். வெளிநாட்டுச் செய்தி மகிழ்ச்சி தரும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கிவிடுவர். குடும்பப் பிரச்சினை சீராகும். கணவர்வழியில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

தம்பதிகளிடையே அன்பு கூடும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடை வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடலில் கை, கால், மூட்டு வலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். வரவுக்கு சமமாக செலவுகள் இருக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வரவேண்டிய பதவி தேடி வரும். நண்பர்களில் ஒரு சிலரே உங்களிடம் உண்மையான அன்புடன் இருப்பார்கள். அவர்களில் ஒருவரே உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து உங்களுடன் அனுசரணையாக இருப்பார். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்