2026 ஜூலை 5 முதல் 11 வரை (ஆனி 21 - 27 வரை) வார ராசிபலன் குறித்த முழு விவரத்தை இங்கு காண்போம்.
மேஷம்
இந்த வாரம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியனின் சுப கோச்சார நிலையால் தொட்ட காரியங்கள் துரிதமாக நிறைவேறும். மனதில் புதிய தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடிந்து மகிழ்ச்சி நிலவும்.
உத்தியோகத்தில் திறமைகளுக்கு உரிய அங்கீகாரமும் புதிய பொறுப்புகளும் தேடிவரும். சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வரவு காரணமாக எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். புதிய முதலீடுகள் நல்ல பலன் தரும்.
இல்லத்தரசிகளுக்குக் குடும்பத்தில் மதிப்பும் ஆடை சேர்க்கையும் கூடும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்திப் பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த சோர்வு நீங்கி உடல் சுறுசுறுப்பு உண்டாகும்.
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, வீட்டின் மேல்மாடியில் பறவைகளுக்குத் தூய்மையான தண்ணீர் மற்றும் கோதுமை தானியங்களை வைத்து வர காரியத் தடைகள் நீங்கி பெரும் நற்பலன்கள் உண்டாகும். இதனால் மன அமைதியும் குடும்பத்தில் சுபிட்சமும் தடையின்றி நிலைபெறும்.
ரிஷபம்
இந்த வாரம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் சுக்கிரனின் நற்பலன்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி மனவருத்தங்கள் யாவும் நீங்கும். புதிய சொத்துக்கள் வாகனங்கள் வாங்கும் யோகம் கைகூடி வரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் வெகுவாக உயரும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு மற்றும் ஊதிய உயர்வு மனமகிழ்ச்சியைத் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய முதலீடுகள் தடையின்றி கிடைக்கும். புதிய நவீன உத்திகளைக் கையாண்டு லாபத்தை அதிகரிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம், லாபம் காணப்படும்.
இல்லத்தரசிகள் கணவரின் அன்பையும் ஆதரவையும் பெற்று மகிழ்வர். மாணவர்கள் கலை மற்றும் விளையாட்டுத் துறையில் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி முயற்சிகள் சாதக பலனைத் தரும். கண் சம்பந்தமான சிறிய உபாதைகள் வந்து நீங்கும்.
புதன், வெள்ளி காலையில் பசுவிற்கு நெய் தடவிய வெல்லம் கலந்த கோதுமை ரொட்டியை உங்கள் கைகளால் வழங்கவும். மேல்மாடியில் பறவைகளுக்குத் தண்ணீர் வைத்து வர லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் செல்வச் செழிப்பும் அமைதியும் தடையின்றி நிலைபெறும்.
மிதுனம்
ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்துள்ள குரு பகவானின் சுப பார்வையால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பணத்தட்டுப்பாடு நீங்கி சுபிட்சம் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் முழுமையாக நீங்கி ஒற்றுமை பலப்படும்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நிலுவைப் பணிகள் விரைந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபம் அதிகரிக்கும். புதிய கிளைகள் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வரவு செலவுக் கணக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும்.
இல்லத்தரசிகள் குடும்பப் பொறுப்புகளைத் திறம்பட நிர்வகித்து பாராட்டை பெறுவீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கடின உழைப்பால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்க்கவும். தூக்கமின்மைப் பிரச்சினை தலைதூக்கலாம்.
புதன், சனி நாட்களில் அன்று முளைகட்டிய பச்சைப்பயறை பறவைகளுக்கு, பசுக்களுக்கு உணவாக அளிப்பது புதன் தோஷத்தைப் போக்கி காரிய வெற்றியையும் மன அமைதியையும் தரும். இதனால் கல்வியிலும் தொழிலிலும் அபாரமான வளர்ச்சி உண்டாகும்.
கடகம்
ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் செவ்வாயின் லாபகரமான நிலையால் பொருளாதார நிலை மிகவும் திருதிருப்தி தரும். நீண்ட நாட்களாக வராத பழைய கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற நல்ல வேலை அமையும். சுயதொழில் செய்பவர்கள் புதிய ஆர்டர்களைப் பெற்று தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபடலாம். எதிர்பார்த்த வங்கி உதவி கிட்டும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நல்ல லாபம் மற்றும் சுமுகமான சூழல் நிலவும்.
இல்லத்தரசிகளின் ஆலோசனைகள் குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு கல்வியில் சிறந்து விளங்கித் தேர்வுகளில் சாதனை படைப்பீர்கள். தனித்திறமைகள் வெளிப்படும் வாரமிது. உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.
திங்கள், செவ்வாய் இரவு பச்சரிசியைத் தூய்மையான தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி அரச மரத்திற்கு ஊற்றவும். பறவை மற்றும் நாய்களுக்கு உணவளித்து வர மனக்குழப்பங்கள் நீங்கும். இதனால் சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
சிம்மம்
ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியனின் பலத்தால் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் எதிர்பார்த்த லாபமும் சுப செய்திகளும் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுமுகமான சூழல் எப்போதும் நிலவும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நவீன உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். தினசரி வருமானம் மிகவும் திருப்திகரமாக இருக்கும்.
இல்லத்தரசிகளுக்கு நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கூட்டுப் பிரார்த்தனைகளில் ஆர்வம் காட்டும் மாணவர்கள் படிப்பிலும் முதலிடம் பிடிப்பார்கள். உயர்கல்விக்கான பயணங்கள் சாதகமாகும். தந்தையின் உடல்நலத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அன்றாடம் காலையில் தாமிரப் பாத்திரத்தில் தூய நீர் எடுத்து பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வது காரிய சித்தி உண்டாக்கும். வீட்டின் மேல்மாடியில் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதும், இரவில் நாய்களுக்கு பிஸ்கட் தருவதும் மன அமைதியையும் சுபிட்சத்தையும் தரும்.
கன்னி
ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவானின் சாதகமான சஞ்சாரத்தால் காரிய வெற்றி காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நீண்ட நாட்களாகத் திட்டமிட்ட ஆன்மீகப் பயணங்கள் கைகூடி வரும். நெருங்கிய நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் கோரியவர்களுக்குச் சாதகமான உத்தரவு இந்த வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் எளிதாக வசூலாகும். பணப்புழக்கம் அதிகரித்து அடுத்தகட்ட முதலீடுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் உங்களுடன் இணைவார்கள்.
இல்லத்தரசிகள் கணவர் வழியில் நல்ல செய்திகளை பெறுவீர்கள். மாணவர்கள் கணிதம் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பாதங்களில் லேசான வலி அல்லது உடல் சோர்வு ஏற்படலாம்.
தினமும் முளைகட்டிய பயறு வகைகளை பசுக்கள், பறவைகளுக்கு இரையாக வைப்பது தோஷங்கள் யாவற்றையும் நீக்கி நன்மைகளைப் பெருக்கும். இதனால் கல்வியிலும் தொழிலிலும் அபாரமான வளர்ச்சி மற்றும் அமைதி உண்டாகும். அன்னையின் சகோதர வழி உறவுகளை அனுசரித்துச் செல்லவும்.
துலாம்
ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவானின் வலுவான அமைப்பால் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் யாவும் முழுமையாக விலகும். வாராந்திர பணவரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி குடும்ப ஒற்றுமை பலப்படும் வாரமிது.
உத்தியோகத்தில் தங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதிய உயர்வை மேலதிகாரிகளிடம் இருந்து பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குப் பாராட்டுக்கள் குவியும். வியாபாரத்தில் புதிய கிளைகள் அல்லது தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியான சூழலும் நிலவும். மாணவர்கள் விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வென்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்ப்பீர்கள். தொண்டை சம்பந்தமான சிறிய ஒவ்வாமை ஏற்பட்டு விலகும்.
சனி, புதன் ஆகிய நாட்களில் எள் கலந்த சாதத்தை வீட்டின் மேல்மாடியில் காக்கைகளுக்கு வைப்பது சனியின் தாக்கத்தைக் குறைத்து நன்மைகளைத் தரும். இதனால் மன அமைதியும் தொழிலில் நல்ல முன்னேற்றமும் எவ்விதத் தடையுமின்றிச் சீராக உண்டாகும்.
விருச்சிகம்
ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பாக்ய பார்வையால் குடும்பத்தில் சுபமங்கள நிகழ்வுகள் தடையின்றி நடக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய வீடு அல்லது சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடி வரும்.
உத்தியோகத்தில் புதிய அதிகாரமிக்க பொறுப்புகளும் பதவிகளும் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளுக்கு வங்கிக் கடன்கள் எவ்விதத் தடையுமின்றி எளிதாகக் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களால் லாபம் பெருகும். தினசரி வருமானம் அதிகரிக்கும்.
இல்லத்தரசிகளுக்குப் புகுந்த வீட்டு உறவினர்களின் ஆதரவு பெருகும். மாணவர்கள் கல்வியில் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்திப் போட்டிகளில் முதலிடம் பிடித்துப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். செரிமானக் கோளாறுகள் வரக்கூடும் என்பதால் வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
செவ்வாய், வியாழன் அன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வருவதுடன், புறாக்கள் மற்றும் பச்சைக்கிளிகளுக்கு தானியங்கள் அளித்து வர குருவின் அருள் இரட்டிப்பாகும். இதனால் காரியங்களில் சுபிட்சமும் அமைதியும் உண்டாகும்.
தனுசு
ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் செவ்வாயின் நிலையால் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும். எவ்வளவு கடினமான பணிகளையும் சுலபமாக முடித்து விடுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்குச் சீராகவும் நிம்மதியாகவும் இருக்கும். குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும் வாரமிது.
உத்தியோகத்தில் வேலைப்பளு கூடினாலும் தனித்திறமையால் அனைத்தையும் எளிதில் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்யும்போது அனுபவசாலிகளின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படவும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நல்ல லாபம் தடையின்றி தொடரும்.
இல்லத்தரசிகளுக்குப் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. மாணவர்கள் சோம்பலைத் தவிர்த்து அதிகாலையில் எழுந்து படித்து வந்தால் மட்டுமே தேர்வுகளில் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் விழிப்புடன் இருக்கவும்.
செவ்வாய், வெள்ளியில் மாதுளம்பழ முத்துக்களை நவதானியங்களுடன் கலந்து அருகிலுள்ள கோவிலில் பிரசாதமாக அளிப்பது கிரக தாக்கத்தைக் குறைக்கும். காரியங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் மாபெரும் வெற்றி எப்போதும் உண்டாகும்.
மகரம்
ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவானின் நிலையால் உங்களின் விடாமுயற்சியால் பழைய குடும்பச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பணப்புழக்கம் எப்போதும் சீராக இருப்பதால் தினசரித் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் பிறக்கும் வாரமிது.
உத்தியோகத்தில் உங்களைச் சுற்றியிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைத் துல்லியமாக அறிந்து செயல்படுவதால் லாபம் சீராக உயர்ந்து மனநிம்மதி தரும். புதிய முதலீடுகளைச் செய்ய இதுவே மிகச் சிறந்த தருணமாக இருக்கும்.
இல்லத்தரசிகள் சிறு சேமிப்புகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்கள் புதிய தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் காட்டி தங்களின் ஆராய்ச்சித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். மூட்டு மற்றும் கால் வலிகள் வந்து நீங்கும் என்பதால் சற்று கவனம் தேவை.
சனி, புதன் நாட்களில் அன்று எள் கலந்த சாதத்தை வீட்டின் மேல்மாடியில் காக்கைகளுக்கு வைப்பது சனியின் தாக்கத்தைக் குறைத்து நன்மைகளைத் தரும். இதனால் மன அமைதியும் தொழிலில் நல்ல முன்னேற்றமும் எவ்விதத் தடையுமின்றிச் சீராக உண்டாகும்.
கும்பம்
இந்த வாரம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியன் பலத்தால் எதிலும் நிதானத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் பேராதரவு உங்களுக்கு எப்போதும் மனமகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கும்.
உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளைச் சேர்க்கும்போது ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம். புதிய தொழில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவது நல்லது.
இல்லத்தரசிகள் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகள் மற்றும் அலைபேசியை தவிர்த்துப் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் கணுக்கால் அல்லது நரம்பு வலி ஏற்பட்டு விலகும்.
ஞாயிறு, வியாழன் நாட்களில் சூரிய நமஸ்காரம் செய்து, வீட்டின் மேல்மாடியில் பறவைகளுக்குத் தண்ணீரும், தானியங்களும் வைத்து வர நன்மைகள் பெருகும். சூரியனின் முழு அனுகிரகம் கிடைத்து காரியங்கள் அனைத்தும் எவ்வித தடையுமின்றிச் சுமுகமாக முடியும்.
மீனம்
ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பூர்வ புண்ணிய பலத்தால் தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். உறவினர்களிடையே மனக்கசப்பு நீங்கி குடும்ப ஒற்றுமை பலப்படும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும் வாரமிது. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகளுக்குப் புதிய மதிப்பும் உயர்ந்த மரியாதையும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பெரிய ஆர்டர்கள் கிடைத்து லாபம் பெருகும். புதிய முதலீடுகள் சாதகமாகும். சக கூட்டாளிகளின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும் என்பதால் தொழிலில் புதிய வேகம் கூடும்.
இல்லத்தரசிகள் உறவினர்களின் வருகையால் மிகவும் மகிழ்ச்சியடைவர். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றுப் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். கல்லீரல் அல்லது சர்க்கரை அளவில் லேசான மாறுபாடுகள் தோன்றலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை.
செவ்வாய், வியாழன் அன்று மஞ்சள் நிற மலர்களால் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, வசதியற்ற ஏழை எளியோருக்கு மஞ்சள் நிற உணவு வழங்குவது சிறந்தது. முதியோர்களுக்கு உதவி செய்வதும், காகங்களுக்கு பருக தண்ணீர் வைத்து வருவதும் சனியின் பரிபூரண அனுகிரகம் கிட்ட உதவும்.