2026 மே 10 முதல் மே 16 வரை (சித்திரை 27 முதல் வைகாசி 2 வரை) வார ராசிபலன் குறித்த முழு விவரத்தை இங்கு காண்போம்.
மேஷம்
பொருளாதார ரீதியாக இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். பணப்புழக்கம் சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகள் கவலை தரும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் நிதி நெருக்கடியைத் தவிர்க்கலாம். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது.
குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு மனதிற்குத் ஆறுதல் தரும். உறவினர்களுடன் பேசும்போது நிதானம் தேவை. சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும் காலம்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். அதிக உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும் உன்னத நேரமிது.
அஜீரணம் மற்றும் கால் வலி தொடர்பான உபாதைகள் வரலாம். உணவுக் கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தவும். தினமும் கந்த சஷ்டி கவசம் வாசிப்பது நற்பலன் தரும். இந்த வாரம் நீங்கள் பயன்படுத்த வேண்டிய அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
ரிஷபம்
ராசிநாதன் சுக்கிரன் பலமாக இருப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். தடைபட்டிருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும்.
இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகை உற்சாகத்தை அளிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும் வாரம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்கும் எண்ணம் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேல் அதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு உற்சாகத்தைத் தரும். சவால்களைத் திறம்பட முறியடிப்பீர்கள்.
கண்கள் மற்றும் உஷ்ணம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படலாம். போதிய ஓய்வு எடுப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் மஹாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்வது நலம் பயக்கும். இந்த வாரம் நீங்கள் பயன்படுத்த வேண்டிய அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மிதுனம்
வருமானம் அதிகரிக்கும் வாரமிது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்து சேரும் என்பதால் விழிப்புணர்வு தேவை. பணப்பரிமாற்றத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நலம். சுப விரயங்கள் உண்டாகலாம். செலவுகளில் கவனம் அவசியம்.
குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் நல்ல மாற்றங்கள் தெரியும். நண்பர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் உதவும். சமூக வட்டத்தில் செல்வாக்கு உயரும் வாரம்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணியிடத்தில் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சக பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
நரம்புத் தளர்ச்சி அல்லது ஒவ்வாமை ஏற்படலாம். உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது. அன்றாடம் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பது மன அமைதி தரும். பசுக்களுக்கு அருகம்புல் அல்லது புறாக்களுக்கு கோதுமை தரலாம். இந்த வார அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கடகம்
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தடைபட்ட பண வரவு தானாகவே வந்து சேரும். அதே சமயம் வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம். வீண் விரயங்களைத் தவிர்ப்பதன் மூலம் நிதி நிலையைச் சீராக வைத்திருக்க முடியும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு மனதிற்குப் பலம் சேர்க்கும். உறவினர்களுடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கி இணக்கம் ஏற்படும். பிள்ளைகளின் சுப காரியங்கள் குறித்துப் பேசுவதற்கு இது தகுந்த மிகச்சிறந்த தருணம்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் அனுபவஸ்தர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உழைப்பிற்கேற்ற நற்பெயர் உங்களைத் தேடி வரும்.
சளி மற்றும் சுவாசக் கோளாறுகள் வரலாம். நீர் ஆகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்வது நலம். அன்றாடம் அம்பிகை வழிபாடும் தானதருமங்களும் நன்மைக தரும். இந்த வாரம் நீங்கள் பயன்படுத்த வேண்டிய அதிர்ஷ்ட நிறம் வெண்மை.
சிம்மம்
வரவுக்கேற்ற செலவுகள் வந்து சேரும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். வீண் செலவுகளைக் குறைப்பது பொருளாதார மேன்மைக்கு வழிவகுக்கும். கமிஷன் மற்றும் ஏஜென்சி தொழிலில் இருப்பவர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
குடும்பப் பெரியவர்களின் ஆசி கிட்டும். சகோதர வழியில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு கூடும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும் வாரம்.
தொழில் ரீதியாகப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் லாபம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்குப் பணிச்சுமை அதிகரித்தாலும் பாராட்டு கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
முதுகு வலி மற்றும் உடல் சோர்வு ஏற்படலாம். முறையான உடற்பயிற்சி அவசியம். அன்றாடம் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது உத்வேகம் அளிக்கும். இந்த வார அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு. தந்தை வழி பெரியவர்களது ஆசி தக்க சமயத்தில் நல்வழி காட்டும்.
கன்னி
வரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகள் கையை மீறிச் செல்லும். சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். வரவுக்கும் செலவுக்கும் இடையே சமநிலை காப்பது அவசியம். திடீர் யோகங்கள் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.
இல்லத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிணக்குகள் தீரும். பிள்ளைகளின் நடத்தையில் நல்ல மாற்றங்கள் காணப்படும். சமூகப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பெயர் கிட்டும். நண்பர்களின் உதவி மனதிற்குத் தைரியம் தரும் வாரமாகும்.
வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருந்தாலும் நஷ்டம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் இந்த வாரம் கிடைக்கும்.
தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள், ஒவ்வாமை வரலாம். காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபமேற்றி வழிபடுவது சிறந்தது. இந்த வார அதிர்ஷ்ட நிறம் பச்சை. வெறும் காலில் மாலை நேரம் சிறுதி தூரம் நடப்பது நல்லது.
துலாம்
நிதிநிலை சீராக இருக்கும். வருமானத்திற்குப் புதிய வழிகள் பிறக்கும். ஆபரணங்கள் மற்றும் கலைப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வீண் அலைச்சலால் சில செலவுகள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக இந்த வாரம் சாதகமான நற்பலன் தரும்.
குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். இல்லத்தரசிகளுக்குப் புகுந்த வீட்டார் மூலம் ஆதரவு பெருகும். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது மகிழ்ச்சி தரும். சமூகத்தில் உங்கள் வாக்குக்கு மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று மனநிறைவு அடைவீர்கள்.
தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். கூட்டு வியாபாரத்தில் லாபம் பெருகும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். நிர்வாகத் திறமை மூலம் சிக்கல்களைத் தீர்ப்பீர்கள்.
சிறுநீரகத் தொந்தரவு அல்லது முதுகு வலி ஏற்படலாம். போதிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. இந்த வாரம் நீங்கள் பயன்படுத்த வேண்டிய அதிர்ஷ்ட நிறம் வெளிர்நீலம்.
விருச்சிகம்
பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன் தொகை வந்து சேரும். தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நிதி இழப்பைத் தடுக்கும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர் வழியில் சில நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் கைகூடும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு காரிய வெற்றியைத் தரும். சமூக அந்தஸ்து ஓங்கி நிற்கும் நல்ல வாரமிதுவாகும்.
வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தை ஈட்டுவீர்கள். போட்டியாளர்களைத் திறம்பட முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சக ஊழியர்களிடம் கனிவாகப் பேசுவது நலம் தரும். உங்கள் உழைப்பிற்கு உரிய மதிப்புக் கிடைக்கும் நேரமிது.
ரத்த அழுத்தம் அல்லது உஷ்ண உபாதைகள் வரலாம். மனதை அமைதியாக வைத்துக்கொள்வது அவசியம். செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபடுவது மனவலிமை தரும். இந்த வாரம் நீங்கள் பயன்படுத்த வேண்டிய அதிர்ஷ்ட நிறம் அடர் சிவப்பு.
தனுசு
பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத பண வரவு உற்சாகத்தைத் தரும். அதே சமயம் குடும்ப விசேஷங்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். வரவை விடச் செலவு அதிகம் ஆகாமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சகோதரர்களுடன் இருந்த விரிசல் சரியாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்லத் திட்டமிடுவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். சமூக விழாக்களில் பங்கேற்றுப் பெருமை அடைவீர்கள். உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
சொந்தத் தொழில் லாபகரமாக அமையும். புதிய கிளைகளைத் திறக்கும் எண்ணம் நிறைவேறும். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் நிர்வாகத் திறன் மற்றும் ஆளுமைப் பண்பு உயரும் வாரமாகும்.
முழங்கால் வலியுடன், வாயுத் தொல்லைகளும் ஏற்படும். மாலை நேர நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வது நலம் தரும். இந்த வாரம் நீங்கள் அணிய வேண்டிய அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மகரம்
வரவுகள் சுமாராகவே இருக்கும். தேவையற்ற பயணங்களால் பண இழப்பு ஏற்படலாம். திட்டமிட்டுச் செலவு செய்வது நிதி நெருக்கடியைத் தவிர்க்கும். வராத கடன்களைத் திரும்பப் பெற எடுக்கும் முயற்சிகள் பலன் தரும். சேமிக்கத் தொடங்குவதற்கு இது உகந்த காலமாகும்.
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள் மனவருத்தத்தைத் தரும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. உறவினர்களுடன் சுமுகமான உறவு நீடிக்கும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கை கொடுக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு கூடும்.
வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். புதிய முதலீடுகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கலாம். பொறுமையுடன் செயல்பட்டு பணியிடத்தில் வெற்றிகளைப் பெற முடியும்.
கை, கால் வலி அல்லது நரம்புப் பிரச்சனைகள் வரலாம். தியானம் மற்றும் யோகா செய்வது பலன் தரும். அன்றாடம் சனிபகவானுக்கு கோவிலில் எள் தீபமேற்றவும். இந்த வார அதிர்ஷ்ட நிறம் கருநீலம். வயதான, ஆதரவற்ற நபர்களுக்கு ஏதாவது சிறிய உதவியாவது செய்து வருவது நல்லது.
கும்பம்
பண வரவு சீராக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாகும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் மகிழ்ச்சியைத் தரும். கடன் சுமைகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். நிதி மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நல்வாரமிது.
குடும்பச் சூழல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகள் பயனுள்ளதாக அமையும். பிள்ளைகளின் சுப காரியங்கள் கைகூடும். உறவினர்களுடன் ஏற்பட்ட பகை நீங்கும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் சமூக அந்தஸ்து உயரும். நண்பர்கள் பலமாக இருப்பார்கள்.
வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. புதிய திட்டங்கள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் வந்து சேரும்.
தூக்கமின்மை அல்லது மன உளைச்சல் ஏற்படலாம். போதிய ஓய்வு எடுப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவது மன அமைதியைத் தரும். இந்த வார அதிர்ஷ்ட நிறம் நீலம். இல்லத்துணையின் உறவினர்களுக்கு இயன்ற உதவி செய்வது நல்லது.
மீனம்
வருமானம் அதிகரிக்கும் வாரமிது. தடைபட்டிருந்த பண வரவுகள் வந்து சேரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வீண் விரயங்களைத் தவிர்ப்பதன் மூலம் சேமிப்பை உயர்த்த முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் நிச்சயமாக உண்டு.
குடும்பத்தில் குதூகலம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்களுடன் இருந்த கசப்புணர்வுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் நல்ல செய்திகள் வரும். சமூகத்தில் உங்கள் மீதான நற்பெயர் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுந்த வாய்ப்பு அமையும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
உடல் அசதி அல்லது கண் எரிச்சல் ஏற்படலாம். நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்ளவும். இயன்றவரை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர் சாற்றி வழிபடவும். இந்த வார அதிர்ஷ்ட நிறம் மஞ்சள். பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் பசுக்களை வணங்குவது நற்பலன் தரும்.