குரு நான்காம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் வீடு, தொழில் முயற்சிகள் முன்னேறும். சூரியன் ஆறாம் இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வரவு சீராகும். செலவு கட்டுப்படும். இந்த வாரம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மனதில் நம்பிக்கை வளரும்.
குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். துணையின் ஆலோசனை உதவும். உறவினர்களிடம் நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொதுவாழ்க்கையில் மதிப்பு உயரும். மூத்தவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். இல்லத்தில் சந்தோஷம் நிலவும்.
தொழிலில் புதிய பொறுப்புகள் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மூலம் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். கூட்டாளிகளுடன் கணக்கு விஷயங்களில் தெளிவு அவசியம். பயணம் பயன் தரும். புதிய முயற்சி வெற்றி தரும்.
தலைவலி, உடல் சூடு ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். தண்ணீர் போதியளவு குடியுங்கள். தினமும் காலை சூரியனை வணங்குங்கள். திங்கள், செவ்வாயன்று முருகனை வழிபடுங்கள். செம்பு நாணயம் அதிர்ஷ்டம் தரும்.
குரு மூன்றாம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் முயற்சிகளும் கூட்டாண்மை விஷயங்களும் பலன் தரும். சூரியன் ஐந்தாம் இடத்தில் இருப்பது அறிவாற்றலை உயர்த்தும். வரவு சீராகும். செலவு அதிகரிக்கும். பணத்தை திட்டமிட்டு பயன்படுத்துங்கள்.
குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து சரியாகும். துணையின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்களின் ஆலோசனை பயனளிக்கும். பொதுவாழ்க்கையில் பாராட்டு கிடைக்கும். குழந்தைகள் மகிழ்ச்சி தருவார்கள்.
தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. கணக்கு, வரி ஆவணங்களை சரிபார்க்கவும். உடன் பணியாற்றுபவர்களிடம் பொறுமை தேவை. முயற்சிகளில் நிதானம் காக்கவும்.
கழுத்து, தொண்டை அசவுகரியம் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். வெந்நீர் அருந்துங்கள். நிம்மதி கிடைக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடுங்கள். வெள்ளை மலர்களை சமர்ப்பிக்கவும். வெள்ளி நாணயம் அதிர்ஷ்டம் தரும்.
சூரியன் நான்காம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் முயற்சிகள் வேகம் பெறும். புதன் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் அறிவாற்றல் சிறக்கும். குரு இரண்டாம் இடத்தில் இருப்பதால் பொருளாதார நிலை வலுவாகும். வரவு உயரும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மூத்த உறவினர் நல்ல ஆலோசனை தருவார். நண்பர்களுடன் இருந்த தவறான புரிதல் நீங்கும். பொதுவாழ்க்கையில் பேச்சு கவனத்தை ஈர்க்கும். குழந்தைகள் நல்ல செய்தி தருவார்கள். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள்.
தொழிலில் அறிவாற்றல் வெளிப்படும். வியாபாரத்தில் தொடர்பு முயற்சிகள் பலன் தரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். ஆவணங்கள், ஒப்பந்தங்களில் கவனம் தேவை. புதிய திறன் கற்றுக்கொள்வது முன்னேற்றம் தரும். பேச்சில் நிதானம் காக்கவும்.
செரிமானக் கோளாறு, நரம்புச் சோர்வு ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். உணவை நேரத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். மனஅமைதி பெருகும்.புதன்கிழமை விநாயகரை வழிபடுங்கள். அருகம்புல் சமர்ப்பிக்கவும். பச்சை நிற பொருட்கள், பேனா ஆகியவை அதிர்ஷ்டம் தரும்.
குரு ராசியில் இருந்து ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் இடங்களைப் பார்ப்பதால் கல்வி, குடும்பம், உறவுகளில் முன்னேற்றம் கிடைக்கும். செவ்வாய் துணிச்சலை அதிகரிப்பார். சுக்கிரனால் வீட்டில் நிம்மதி கூடும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனநிம்மதி பெருகும்.
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உயரும். துணையின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்கள் மூலம் செய்தி வரும். உறவினர்களுடன் சந்திப்பு ஏற்படும். நண்பர்கள் உதவுவார்கள். பொதுவாழ்க்கையில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சிரிப்பு நிறையும்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகும். புதிய வாடிக்கையாளர்கள் சேர்வார்கள். உத்தியோகத்தில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். கூட்டாண்மை சாதகமாகும். வெளிப்புற தொடர்புகள் மூலம் வாய்ப்பு வரும். ஒப்பந்தங்களை படிக்கவும். புதிய ஒப்பந்தம் சாதகமாகும்.
உடல் சூடு, வயிற்று அசௌகரியம் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும்.கார உணவை குறைக்கவும். நல்லதே நடக்கும். திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடுங்கள். வீட்டில் தண்ணீர் தெளிக்கவும். வெள்ளிப் பொருட்கள் அதிர்ஷ்டம் தரும்.
சூரியன் இரண்டாம் இடத்தில் இருப்பதால் பணம், குடும்பப் பேச்சில் நன்மை கிடைக்கும். புதன் மூன்றாம் இடத்தில் இருப்பதால் முயற்சிகள் வெற்றி பெறும். குரு பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் செலவுகள் ஏற்படும். வரவு கிடைக்கும். பணநிலை மேம்படும். நல்ல மாற்றம் ஏற்படும்.
குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உறவினர்களுடன் மனக்கசப்பு குறையும். நண்பர்கள் உதவுவார்கள். பொதுவாழ்க்கையில் செயல்பாடு கவனிக்கப்படும். மூத்தவர்களின் ஆலோசனை நன்மை தரும். குழந்தைகள் மகிழ்ச்சி அளிப்பார்கள். குடும்ப ஆதரவு மனதை மகிழ்விக்கும்.
தொழிலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வியாபாரத்தில் புதிய சந்தை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். தொலைதூர தொடர்புகள் பலன் தரலாம். கணக்கு, வரி விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வாய்ப்பு உருவாகும்.
கண் சோர்வு, தூக்கக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். நேரத்திற்கு உறங்குங்கள். ஞாயிற்றுக்கிழமைகளின் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வணங்குங்கள். பறவைகளுக்கு தண்ணீர், ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள். செம்பு பொருட்கள் அதிர்ஷ்டம் தரும்.
சூரியன், புதன் லக்னத்தில் இருப்பதால் தன்னம்பிக்கை, சிந்தனைத் தெளிவு உயரும். குரு பதினொன்றாம் இடத்தில் இருந்து லாபத்தை வலுப்படுத்துகிறார். வரவு அதிகரிக்கும். குடும்பத் தேவைகளால் செலவு ஏற்படும். சேமிப்பு உயரும். நல்ல வாய்ப்புகள் தொடரும். நிதி திட்டம் வெற்றி தரும்.
குடும்பத்தில் உங்கள் ஆலோசனை மதிக்கப்படும். துணையுடன் மனக்கசப்பு நீங்கும். உறவினர்கள் நல்ல தகவல் தருவார்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொதுவாழ்க்கையில் நற்பெயர் உயரும். மூத்தவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். இல்லத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் முடியும். உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணியிடப் போட்டி இருந்தாலும் சமாளிப்பீர்கள். ஆவணங்களை சரிபார்க்கவும். உங்கள் முயற்சி பாராட்டப்படும். மனநிம்மதி பெருகும்.
வயிற்று உப்புசம், நரம்புச் சோர்வு ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். நடைப்பயிற்சி செய்யுங்கள். உணவை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். புதன்கிழமை நாட்களின் விநாயகரை வழிபடுங்கள். அருகம்புல் சமர்ப்பிக்கவும். இளம் பச்சை நிறப் பொருட்கள் அதிர்ஷ்டம் தரும்.
புதன், சுக்கிரன் ராசியில் இருப்பதால் கவர்ச்சி, பேச்சுத்திறன் உயரும். சூரியன் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கலாம். குரு பத்தாம் இடத்தில் இருப்பதால் தொழில் முன்னேற்றம் கிடைக்கும். வரவு சீராகும். நிதிநிலை சீராகும். நல்ல வாய்ப்புகள் தொடரும்.
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். துணையின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் நல்ல செய்தி தருவார்கள். நண்பர்களுடன் பயனுள்ள சந்திப்பு ஏற்படும். பொதுவாழ்க்கையில் அணுகுமுறை பாராட்டப்படும். வீட்டில் வசதி சேர்க்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தொழிலில் உயர்வு வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கை உயரும். வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவு ஏற்படும். செலவுகளை கண்காணிக்க வேண்டும். பயணங்கள் பயன் தரும். முயற்சிகள் வெற்றி தரும்.
முதுகுவலி, சரும அசௌகரியம் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். நீண்ட நேரம் அமராமல் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். உடலுக்கு ஓய்வு அவசியம். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடுங்கள். மல்லிகை மலர் சமர்ப்பிக்கவும். வெள்ளி நாணயம் அதிர்ஷ்டம் தரும்.
குரு ஒன்பதாம் இடத்தில் இருந்து லக்னம், மூன்றாம், ஐந்தாம் இடங்களைப் பார்ப்பதால் பாக்கியம், முயற்சி, அறிவுத்திறன் வளரும். புதன், சுக்கிரன் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் பயணச் செலவுகள் அதிகரிக்கும். வரவு கிடைக்கும். பாக்கியம் துணைநிற்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களுடன் இடைவெளி குறையும். நண்பர்களுடன் பயனுள்ள தொடர்பு ஏற்படும். பொதுவாழ்க்கையில் செல்வாக்கு உயரும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். ஆன்மிக நிகழ்வு மனநிறைவு தரும். குடும்ப அன்பு பெருகும்.
தொழிலில் விரிவாக்க எண்ணங்கள் முன்னேறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் திறமைக்கு மதிப்பு கிடைக்கும். தொலைதூர தொடர்புகள் பயன் தரும். செலவுகளை கண்காணிக்கவும். தொழில் முதலீட்டில் அவசரம் வேண்டாம்.
தொடை வலி, உடல் சோர்வு ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்யுங்கள். நம்பிக்கை வளரும். செவ்வாய், வியாழன் நாட்களில் முருகனை வழிபடுங்கள். சிவப்பு மலர் சமர்ப்பிக்கவும். செம்பு நாணயம் அதிர்ஷ்டம் தரும்.
சூரியன் பத்தாம் இடத்தில் இருப்பதால் தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும். புதன், சுக்கிரன் பதினொன்றாம் இடத்தில் இருப்பதால் லாபம், தொடர்புகள் பெருகும். குரு எட்டாம் இடத்தில் இருப்பதால் செலவுகளில் நிதானம் தேவை. வரவு அதிகரிக்கும். லாப வாய்ப்புகள் தொடரும்.
குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்கள் நல்ல தகவல் தருவார்கள். நண்பர்கள் வட்டம் விரிவடையும். பொதுவாழ்க்கையில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும். துணையுடன் நல்ல முடிவு எடுப்பீர்கள். குழந்தைகள் மகிழ்ச்சி தருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை அணுகுவது பலன் தரும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். கூட்டுப்பணி வெற்றி தரும். முதலீடு, கடன், கையெழுத்தில் அவசரம் வேண்டாம். முயற்சிகளில் தெளிவு தேவை. புதிய வாய்ப்புகள் தொடரும்.
தூக்கக்குறைவு, அஜீரணம் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். எளிய இரவு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். செவ்வாய், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை மஞ்சள் மலர் சமர்ப்பித்து வழிபடுங்கள். மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்குங்கள். மஞ்சள் ஆடை அதிர்ஷ்டம் தரும்.
குரு ராசிக்கு ஏழாம் இடத்தில் இருந்து லக்னம், பதினொன்றாம், மூன்றாம் இடங்களைப் பார்ப்பதால் கூட்டாண்மை, லாபம், முயற்சி முன்னேறும். சூரியன் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் பாக்கியம் துணைபுரியும். வரவு நன்றாக இருக்கும். செலவும் ஏற்படும். நிதி முன்னேற்றம் கிடைக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். துணையின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் நல்ல செய்தி தருவார்கள். நண்பர்கள் உதவுவார்கள். பொதுவாழ்க்கையில் மதிப்பு உயரும். மூத்தவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குடும்பப் பிரச்சினைக்கு நல்ல முடிவு கிடைக்கும். இல்லத்தில் அமைதி நிலவும்.
தொழிலில் வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாண்மை மூலம் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கை உயரும். பயணங்கள் பயன் தரும். சட்ட ஆவணங்களை கவனமாக படிக்கவும். பணியில் நல்ல பெயர் கிடைக்கும். முயற்சிகளில் நிதானம் தேவை.
மூட்டு வலி, உடல் சோர்வு ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். நடைப்பயிற்சி செய்யுங்கள். உடல் சோர்வை அலட்சியம் செய்யாதீர்கள். சனிக்கிழமை சனீஸ்வரனை வழிபடுங்கள். எள் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். வயதானவர்களுக்கு உணவு வழங்குங்கள். கருப்பு எள் அதிர்ஷ்டம் தரும்.
ராகு லக்னத்தில் இருப்பதால் புதிய எண்ணங்கள் தோன்றும். குரு ஆறாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் போட்டிகளை சமாளிக்க முடியும். சூரியன் எட்டாம் இடத்தில் இருப்பதால் நிதி விவகாரங்களில் ரகசியம் காக்கவும். வரவு இருக்கும். செலவுகளை திட்டமிடுங்கள்.
குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் சரியாகும். உறவினர்களுடன் பொறுமை தேவை. நண்பர் உதவுவார். பொதுவாழ்க்கையில் அமைதியான அணுகுமுறை நன்மை தரும். இளையவர்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வீட்டை ஒழுங்குபடுத்துங்கள். குடும்பத்தில் நம்பிக்கை வளரும்.
தொழிலில் சவால்கள் இருந்தாலும் திறமையால் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சேவை தரத்தை மேம்படுத்துங்கள். உத்தியோகத்தில் போட்டி இருக்கலாம். புதிய தொழில்நுட்பம் கற்றுக்கொள்வது முன்னேற்றம் தரும். பணம் கொடுக்கும்போது ரசீது பெறுங்கள். முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவும்.
கணுக்கால் வலி, நரம்புச் சோர்வு ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். நடைப்பயிற்சி செய்யுங்கள். ஓய்வை முறையாக கடைப்பிடியுங்கள். சனிக்கிழமை ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள். விநாயகருக்கு எள்ளுருண்டை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். இரும்புப் பொருள் அதிர்ஷ்டம் தரும்.
சந்திரன், சனி ராசியில் இருப்பதால் சிந்தனைகள் அதிகரிக்கும். குரு ஐந்தாம் இடத்தில் இருந்து லக்னம், ஒன்பதாம், பதினொன்றாம் இடங்களைப் பார்ப்பதால் அறிவு, பாக்கியம், லாபம் மேம்படும். வரவு சீராகும். செலவு ஏற்படும். நல்ல வாய்ப்பு கிடைக்கும். மனநிம்மதி பெருகும்.
குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணையின் ஆலோசனை பயனளிக்கும். உறவினர்களுடன் சந்திப்பு மகிழ்ச்சி தரும். நண்பர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். பொதுவாழ்க்கை திருப்தி தரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தில் அன்பு பெருகும்.
தொழிலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் கூட்டுப்பணிகள் வெற்றி தரும். மேலதிகாரிகளுடன் புரிதல் ஏற்படும். பழைய பணிகள் முடியும். புதிய ஒப்பந்தங்களை கவனமாக படிக்கவும். முயற்சிகளில் தெளிவு தேவை.
கால்வலி, தூக்கக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். நேரத்திற்கு உறங்குங்கள். மனநிம்மதிக்கு பிரார்த்தனை செய்யுங்கள். அன்றாடம் குருபகவானை வழிபடுங்கள். மஞ்சள் மலர் சமர்ப்பிக்கவும். மாலை அமைதியாக பிரார்த்தனை செய்யுங்கள். பொன் மஞ்சள் ஆடை அதிர்ஷ்டம் தரும்.