வார ராசிபலன்

இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்?… வார ராசிபலன் 15-03-2026 முதல் 21-03-2026 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

2026 மார்ச் 15 முதல் 21 வரை (பங்குனி 1 - 7 வரை) வார ராசி பலன் குறித்த முழு விவரத்தை இங்கு காண்போம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு சுபச் செலவுகள், ஆன்மீகப் பயணங்கள் உண்டு. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மனதிற்குள் நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும் உன்னதமான நேரமிது.

குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல் கைகூடும். உறவினர்களிடையே கசப்புணர்வுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். அரசியலில் உள்ளவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். நண்பர்களுடன் இணக்கமான சூழல் நிலவும்.

உத்தியோகத்தில் கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிட்டும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்த்து, இருக்கும் தொழிலைச் சீரமைப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

கண் எரிச்சல் மற்றும் உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் வரலாம். அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்வதும், பசுவிற்கு கோதுமை மற்றும் வெல்லம் வழங்குவதும் சிறந்த பரிகாரமாகும். எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு லாப ஸ்தான கிரக சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், தொட்டதெல்லாம் பொன்னாகும். நீண்ட காலக் கனவுகள் நனவாகும். அரசு வழி காரியங்களில் வெற்றிகள் கிட்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சி தன்னம்பிக்கை ததும்பும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு ஆறுதலைத் தரும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். அரசியல் பிரமுகர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு உங்களுக்குப் பெரும் பலமாக இருக்கும்.

பொருளாதார நிலை சீராக இருக்கும்; பழைய கடன்களை அடைப்பதற்கான வழி பிறக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய கிளைகளைத் தொடங்கலாம். பங்குச் சந்தை, கமிஷன் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஜீரண மண்டலம் தொடர்பான சிறு பிரச்சனைகள் வரலாம். மகாலட்சுமிக்கு மல்லிகை மாலை சூட்டி, அஷ்டகம் பாராயணம் செய்வதும், ஏழைகளுக்குப் பால் அல்லது இனிப்பு தானம் செய்வதும் மேன்மை தரும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு தொழில், உத்தியோகத்தில் புதிய உச்சம் தொடும் வாரம். திறமை மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. மனக் குழப்பம் நீங்கித் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும்; வாழ்க்கைத் துணை மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்கள் தங்களின் சாதுர்யமான பேச்சால் எதிரிகளை வீழ்த்துவார்கள். பொதுக் காரியங்களில் உங்களின் தலைமைப் பண்பு வெளிப்படும்.

புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை அமையும். வியாபாரத்தில் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் தொடர்புகள் கிடைக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை பலப்படும்.

நரம்பு சம்பந்தமான சிக்கல், உடல் சோர்வு ஏற்படலாம். ஏழைகளுக்குப் பச்சை பயறு, கல்வி உபகரணங்களை தானமாக வழங்குவதும் காரிய சித்தியைத் தரும். புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது உங்கள் வாழ்வை வளமாக்கும்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு தந்தை வழி ஆதாயங்கள் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்கள், குலதெய்வ வழிபாடு மூலம் மன அமைதி கிடைக்கும். இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும்.

குடும்பத்தில் உங்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். சகோதர சகோதரிகளிடையே நிலவி வந்த சொத்துத் தகராறுகள் முடிவுக்கு வரும். அரசியலில் உள்ளவர்கள் தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார்கள். நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்லத் திட்டமிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு இடமாற்றம் அமையும். வணிகர்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் லாபம் கிட்டும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய ஏற்ற காலம்.

மூட்டு வலி அல்லது கால் பாதங்களில் வலி ஏற்படலாம். சிவபெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்வதும், அன்னதானம் செய்வதும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவது உங்கள் பாக்கியத்தை அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரமாகும். தேவையற்ற வாக்குவாதங்கள் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். மறைமுக எதிர்ப்புகள் வரலாம். தன்னம்பிக்கையினால் அவற்றை முறியடிப்பீர்கள். பொறுமை ஒன்றே வெற்றிக்கான மந்திரம்.

குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது மன நிம்மதி தரும்; அரசியல்வாதிகள் தங்கள் ரகசியங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்; புதிய நபர்களை நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம்.

தொழிலில் புதிய முதலீடுகளை இந்த வாரம் தள்ளி வைப்பது நல்லது. பங்குச் சந்தையில் அதிக கவனம் தேவை; உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானம் அவசியம். வருமான தடைகள் வந்தாலும் இறுதியில் கைகூடும்.

ரத்த அழுத்தம் இதயம் தொடர்பான சிறு தொந்தரவுகள் வரலாம். ஞாயிறு மாலை சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும், காலையில் உப்பில்லாத உணவை உட்கொள்வது உங்கள் ஆற்றலை மேம்படுத்தும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு கூட்டுத் தொழில் மற்றும் வாழ்க்கை துணையால் மேன்மை உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்; சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். கடினமான பணிகளையும் திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள்.

கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுப காரியங்கள் சுமுகமாக முடியும். அரசியல் துறையில் உள்ளவர்கள் கூட்டணி அமைப்பதில் வெற்றி காண்பார்கள். நண்பர்களிடையே கசப்புணர்வுகள் நீங்கி நட்பு பலப்படும்.

வியாபார போட்டிகளைச் சமாளித்து லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். பொருளாதார நிலை சீராக இருக்கும்; நிலம் சார்ந்த முதலீடுகள் நற்பலன் தரும்.

சிறுநீரகப் பாதை தொற்று, உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் வரலாம். துளசி செடிக்குத் தீபம் ஏற்றுவது, ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த உதவுவதும் பலத்தை அதிகரிக்கும். தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நலம் தரும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு வெற்றி கிட்டும் வாரம். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். புதிய முயற்சிகளில் இறங்குவதற்குத் துணிவு பிறக்கும். உங்களின் நீண்ட காலத் திட்டங்கள் செயல வடிவம் பெறும்.

குடும்பத்தில் உறவினர்களின் வருகையினால் உற்சாகம் பிறக்கும். அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் தேடி வரும். சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குப் பாராட்டுகள் குவியும். நண்பர்களின் உதவியால் முக்கியக் காரியம் ஒன்று நிறைவேறும்.

உழைப்பிற்கு மதிப்புக் கிடைக்கும்; சக ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்து கடன்கள் குறையும். தேவைக்கேற்பப் பண உதவி கிட்டும். புதிய தொழில் தொடங்கத் திட்டமிடுபவர்களுக்கு கடன் எளிதில் கிடைக்கும்.

தோல் சம்பந்தமான அலர்ஜி ஏற்பட்டு விலகும். துர்க்கைக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுவதும், குங்கும அர்ச்சனை செய்வதும் நலம் தரும். தினசரி யோகா, நடைப்பயிற்சி செய்வது மன மனவலிமையை அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறன் வெளிப்படும் வாரம் இது. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்; கலை, இலக்கியத் துறையினருக்குப் புகழும் கௌரவமும் தேடி வரும்.

குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். விசேஷங்களுக்கான ஏற்பாடுகள் களைகட்டும். அரசியல்வாதிகள் புதிய வியூகங்கள் வகுத்து எதிரிகளை முறியடிப்பர். உறவினர்களுடன் சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள்.

தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். பங்குச் சந்தையில் மிதமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் பொறுப்புணர்வு மெச்சப்படும். பழைய சொத்துக்கள் விற்பனை மூலம் லாபம் கிட்டும்.

இதயம், வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு விலகும். ஏழைகளுக்குத் தயிர் சாதம் வழங்குவது நன்மை தரும். தினமும் கந்தன் சன்னதி கருவறையை வலம் வந்து வணங்குவது நலம். காரமான உணவுகளைக் குறைத்து கொள்ளவும்.

Also read:அதிர்ஷ்டக் காற்று வீசும்...வார ராசிபலன் 01-03-2026 முதல் 07-03-2026 வரை

தனுசு

தனுசு ராசியினருக்கு புதிய வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் நிம்மதியும் குடும்பத்தில் அமைதியும் நிலவும் வாரமாக இது அமையும்.

குடும்ப உறவுகள் பலப்படும்; பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்கள் சமூக அந்தஸ்து உயரும்; முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களுடன் கருத்துப் பரிமாற்றம் உற்சாகம் தரும்.

உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். வியாபார போட்டிகளை நேர்மையால் முறியடிப்பீர்கள். ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறையினருக்கு முன்னேற்றம் உண்டு. பணப்புழக்கம் சீராக இருக்கும்.

நுரையீரல் சம்பந்தமான தொந்தரவுகளை தடுக்க குளிர்ந்த உணவுகளைத் தவிர்க்கவும். மஞ்சள் நிற மலர்களால் சிவனை அர்ச்சனை செய்வதும், நெற்றியில் சந்தனம் இட்டுக் கொள்வது குரு அருளைப் பெற்றுத் தரும்.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு வீரம், விவேகம் அதிகரிக்கும் வாரம். இளைய சகோதரர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். குறுகிய காலப் பயணங்கள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முயற்சிகள் தடையின்றி நிறைவேறும்.

குடும்பத்தில் கொண்டாட்டங்கள் நடைபெறும்; பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு அதிரடி முடிவுகள் எடுப்பர். சமூகத் தொண்டுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களிடையே மதிப்பு உயரும்.

உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். தகவல் தொடர்பு, எழுத்துத் துறையில் உள்ளவர்களுக்குப் பொற்காலம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் உண்டு. புதிய முதலீடுகளுக்கு ஏற்ற தருணம் இது.

காது மற்றும் தொண்டை தொடர்பான சிறு தொந்தரவுகள் வரலாம். ஏழைகளுக்கு எள் கலந்த உணவு தானம் செய்வது நலம் தரும். அனாதைகள், ஏழைகள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவுவது சனியின் அருளைப் பெற்றுத் தரும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு பேச்சாற்றலால் காரியங்களைச் சாதிக்கும் வாரம். தன வரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடைபெறும். உங்களின் வாக்கு சாதுர்யம் உங்களை முன்னிலைப் படுத்தும்.

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் சொல்லிலும் செயலிலும் புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். உறவினர்களிடையே நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கும்.

உத்தியோகத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவரும் சலுகைகளை அறிவித்து லாபம் ஈட்டுவார்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்புகள் உயரும்.

பற்கள், கண்கள் தொடர்பான பராமரிப்பு தேவை. விநாயகப் பெருமானை அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்வதும் காரியத் தடைகளை நீக்கும். இனிமையாக பேசுவது, கோபத்தைக் குறைப்பது வெற்றி ரகசியமாக அமையும்.

மீனம்

மீன ராசி நேயர்களுக்கு ஆற்றலும் வேகமும் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். தனித்திறமை வெளிப்பட்டு சமூகத்தில் கௌரவம் உயரும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தன்னம்பிக்கை மேலோங்கும்.

குடும்பத்தில் உங்கள் முடிவுகளுக்குப் ஆதரவு கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்குப் புதிய பொறுப்புகளும், மேலிடத்தின் ஆதரவும் கிடைக்கும்; உங்களின் செல்வாக்கு உயரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை கூடினாலும் அவற்றைச் சிறப்பாக முடிப்பீர்கள். வணிகத் துறையில் உள்ளவர்கள் புதிய முதலீடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். பணப்புழக்கம் சீராக இருக்கும். வெளிநாட்டு ஆதாயம் உண்டு.

உடல் உஷ்ணம், தலைவலி போன்றவை அவ்வப்போது ஏற்படும். ஜீவ சமாதிகளை வலம் வந்து வணங்குவதும், பசுவிற்கு மஞ்சள் நிறப் பழங்களை வழங்குவதும் வெற்றி தரும். மஞ்சள் நிற ஆடைகளை அணிய ஆற்றல் அதிகரிக்கும்.