2026 மார்ச் 22 முதல் 28 வரை (பங்குனி 8 - 14 வரை) வார ராசி பலன் குறித்த முழு விவரத்தை இங்கு காண்போம்.
மேஷம்
இந்த வாரம் பல நல்ல தருணங்களை கொண்டு வரும். முன்னர் தொடங்கி வைத்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். அரசு அல்லது நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். படைப்புத்திறன் மிக்கவர்களுக்கு அங்கீகாரம் உண்டு. வார இறுதியில் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெரியவர்களுடன் நல்ல உறவு பேணுவீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். சமூக அந்தஸ்து உயரும். அரசியல் தொடர்பான ஆதரவு கிடைக்கும். பழைய தகராறுகள் முடிவுக்கு வரும்.
தொழில் செய்வோருக்கு வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். முதலாளிகள் மகிழ்ச்சியடைவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள்.
உடல் சோர்வு மற்றும் அஜீரண பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சிவ பூஜை செய்வது மனதிற்கு அமைதி ஏற்படுத்தும். இயன்ற வரை மௌன விரதம் மற்றும் உண்ணா நோன்பு இருப்பது நன்மை தரும்.
ரிஷபம்
இந்த வாரம் பொருளாதார ரீதியாக சிறப்பாக அமையும். எதிர்பாராத வருமானம் வர வாய்ப்புண்டு. கடன் பிரச்சனைகள் தீரும். புதிய சொத்து சேரும். பழைய முதலீடுகள் லாபம் தரும். வார இறுதியில் அண்ணன் அல்லது அக்காள் வீட்டில் இருந்து நற்செய்தி வரும்.
குடும்பத்தில் பாசம் பெருகும். தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடு அகலும். பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பழைய நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும். சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். அரசியல் பயணங்கள் உண்டு.
வியாபார விரிவாக்கம் செய்ய நல்ல நேரம். பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுப்பது நன்மை தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாத இறுதியில் பதவி உயர்வு உண்டு.
உடல்நிலை சீராக இருப்பினும் கண்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். பசுமாட்டுக்கு அருகம்புல் கொடுப்பதும், அனாதை ஆசிரமங்களுக்கு அரிசி மற்றும் தானியங்கள் தானம் செய்வதும் நல்லது.
மிதுனம்
இந்த வாரம் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் நல்ல உறவு நிலவும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சமூக ஊடகங்களில் நீங்கள் ஆக்டிவாக இருப்பீர்கள். அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வீர்கள்.
தொழில் செய்வோருக்கு போட்டிகள் அதிகமாக இருக்கும். ஆனால் உங்கள் திறமையால் முன்னேறுவீர்கள். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாகும். சம்பள உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் தொடர்பு ஏற்படும்.
தலைவலி, மைக்ரேன் போன்ற பிரச்சனைகள் தோன்றலாம். போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ளவும். பிள்ளையாருக்கும், நந்திக்கும் அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது தடைகளை விலக்கி வெற்றி தரும்.
கடகம்
உறவினர்களிடம் இருந்து எதிர்பாராத நிதி உதவி கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வார இறுதியில் நண்பர்களுடன் நேரத்தை கழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மாமனார், மாமியார் உறவு சுமூகமாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பழைய நண்பர்கள் தொடர்பு கொள்வார்கள். சமூக சேவை மற்றும் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஏற்றுமதி தொழில் செய்வோருக்கு நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வேலை மாற்றம் செய்ய நினைப்பவருக்கு நல்ல சமயம்.
சளி, இருமல் பிரச்சனை ஏற்படலாம். சிவபெருமானுக்கு பசும்பால் அபிஷேகம் செய்வதும் அம்மனுக்கு வெற்றிலை மாலை சாத்துவதும் புண்ணியம். திருக்கோவில் அன்னதானத்திற்கு காய்கறிகள் தானமாக வழங்குவது நல்லது.
சிம்மம்
இந்த வாரம் உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பதவி உயர்வு கிடைக்கும். பணியில் முன்னேற்றம். புதிய பதவிகள் தேடி வரும். திருமணம் நிச்சயிக்கப்படும். உங்கள் குடும்பத்தில் புதிய சொந்தங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
வீட்டில் பூஜை அல்லது விழா நடத்துவீர்கள். பெற்றோர் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். சமூக அந்தஸ்து உயரும். அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்படும்.
தொழில் செய்வோருக்கு வியாபாரம் விரிவாகும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சுதந்திரமாக தொழில் செய்வோருக்கு நல்ல காலம். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
இதயம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டும். அவ்வப்பொழுது மஞ்சள் நிற ஆடைகளை ஏழை எளியவருக்கு தானம் செய்வது நல்லது. ஏழைப் பெண்களுக்கு வெள்ளை நிற இனிப்புகள் தானம் செய்யலாம்.
கன்னி
வருமானம் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் லாபம் தரும். வார இறுதியில் ஏதேனும் புண்ணிய ஸ்தலத்திற்கு செல்வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய நண்பர்கள் சேர்வார்கள். சகோதரர்களிடம் இருந்து உதவி கிடைக்கும்.
திருமணமானவர்களுக்கு இல்லறம் இனிக்கும். உறவினர்களுடன் நல்ல புரிதல். நண்பர்கள் மூலம் சமூக அந்தஸ்து உயரும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசியல் ரீதியாக வெளியூர் பயணம் செய்ய நேரிடும்.
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும். பணியிடத்தில் சக பணியாளர்களுடன் நல்லுறவு ஏற்படும். ஐடி துறையினருக்கு நல்ல நேரம். பணி நிமித்தமாக வெளியூர் பயணங்கள் உண்டு.
கை கால் வலி மற்றும் அசதி ஏற்பட்டு விலகும். பசு மாட்டிற்கு வெண்பூசணி மற்றும் அகத்திக்கீரை வழங்குவது நல்லது. ஆரம்பப்பள்ளி மாணவ மாணவியருக்கு தேவையான கல்வி உபகரணங்களை தானம் வழங்குவது நன்மைகளை வழங்கும்.
துலாம்
இந்த வாரம் உங்களுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும். திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் நடக்கலாம். வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பழைய வழக்குகள் முடிவுக்கு வரும். கலைத்துறையில் புகழ் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும், தம்பதிகளிடையே நல்லுறவும் உண்டு. பிள்ளைகள் மூலம் நிம்மதி ஏற்படும். சமூக அமைப்புகளில் உங்கள் பங்களிப்பு அதிகரிக்கும். அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் சேரும். புதிய முயற்சிகளில் இறங்க இது நல்ல நேரம். பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சருமத்தில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் தோன்றலாம். மகாலட்சுமி தயாரிக்க முல்லை அல்லது தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. வயதான சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் மற்றும் சேலை ஆகியவற்றை பரிசாக வழங்கி ஆசி பெறுவது நல்லது.
விருச்சிகம்
எதிர்பாராத வருமானம் வரும். கடன் தொல்லை நீங்கும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வார இறுதியில் உறவினர்களுடன் சந்திப்பும், புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டு.
குடும்பத்தில் அன்பு பெருகும். மாமனார், மாமியார் உறவு மேம்படும். நண்பர்கள் துணை புரிவார்கள். சமூக நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். பூர்விக சொத்து சம்பந்தமான பழைய தகராறுகள் முடிவுக்கு வரும்.
தொழில் செய்வோருக்கு வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும், வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கவனமாக செயல்பட வேண்டும்.
அடிவயிற்றில் வலி, சிறுநீர் பாதையில் தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தினமும் மாலை நேரத்தில் சிறிது தூரம் காலாற வெயில் படும்படி நடந்து வருவது நல்லது. முடிந்தவரை அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவது சிறப்பு.
தனுசு
இந்த வாரம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய வாகனம் வாங்கும் சந்தர்ப்பம் ஏற்படும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். சகோதரர்கள் மூலம் நற்செய்தி வரும். திருமண யோகம் கைகூடும்.
குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். பெற்றோர் ஆசிர்வாதம் கிடைக்கும். உறவினர்களுடன் இனிய உறவு ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சமூக ஊடகங்களில் புகழ் பெறுவீர்கள். அரசியல் கூட்டங்களில் பேசி பொதுமக்கள் ஆதரவு பெறுவீர்கள்.
வியாபாரத்தில் விரிவாக்கம் செய்ய நல்ல நேரம். புதிய கிளைகள் தொடங்கலாம். பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயரும். சம்பள உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் தொடர்பு ஏற்படும்.
இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் வலி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு மஞ்சள் நிற மாலைகளை சமர்ப்பணம் செய்வது நல்லது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வெண்ணெய் காணிக்கை செலுத்துவது பலன் தரும்.
மகரம்
உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பழைய கடன்கள் தீரும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வார இறுதியில் புண்ணிய ஸ்தல யாத்திரை செல்வீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வீட்டில் விருந்தினர்கள் வருகை உண்டு. பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். அரசியல் பிரமுகர்களுடன் நெருக்கம் ஏற்படும்.
தொழில் செய்வோருக்கு வியாபாரத்தில் லாபம் குவியும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். முதலாளிகள் மனம் மகிழ்வார்கள். சுதந்திரமாக தொழில் செய்வோருக்கு நல்ல காலம். பணி நிமித்தமாக பயணம்.
பற்கள் மற்றும் முழங்கால்களில் வலி ஏற்பட்டு நீங்கும். வண்டி வாகனங்களில் நிதானமாக சென்று வர வேண்டும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கருப்பு உளுந்து தானம் செய்வது சிக்கல்களுக்கு நிவர்த்தி தரும்.
கும்பம்
இந்த வாரம் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் சேர்வார்கள். பழைய உறவுகள் புத்துயிர் பெறும். வெளிநாட்டில் இருந்து நற்செய்தி கிடைக்கும். கலைத்துறையில் புகழ் கிடைக்கும். காதல் விவகாரத்தில் வெற்றி உண்டு.
குடும்பத்தில் நல்லிணக்கம். திருமணமானவர்களுக்கு இல்லறம் இனிக்கும். உறவினர்களுடன் நல்ல உறவு நிலவும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். சமூக அமைப்புகளில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். அரசியல் ரீதியாக ஆதாயம் கிட்டும்.
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வேலை மாற்றம் செய்ய நினைப்பவருக்கு இது நல்ல சமயம்.
கணுக்கால் வலி மற்றும் ரத்த ஓட்டம் சம்பந்தமான சிக்கல்கள் ஏற்படலாம். மூச்சுத் திணறல் இருந்தால் அதை கவனிக்கவும். தினமும் மெதுவான நடைப்பயிற்சி அவசியம். சனி ப்ரீதியாக கருப்பு நிற வஸ்திரங்களை முதியோர்களுக்கு தானம் தரலாம்.
மீனம்
இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும். சொந்த தொழில் தொடங்க வாய்ப்புண்டு. பழைய வழக்குகள் முடிவுக்கு வரும். வார இறுதியில் நண்பர்களுடன் வெளியூர் பயணம் உண்டு.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் உள்ள பெரியவர்கள் மனம் மகிழ்வார்கள். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். நண்பர்கள் மூலம் சமூக அந்தஸ்து உயரும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசியல் பிரமுகர்கள் தொடர்பு பயன் தரும்.
தொழில் செய்வோருக்கு வியாபாரத்தில் விரிவாக்கம் செய்யலாம். பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயரும். சம்பள உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு. பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு மற்றும் உடல் அசதி ஆகியவை ஏற்படும். காலையில் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி நடைபயிற்சி செய்வது நல்லது . குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வலம் வந்து வழிபடுவது நல்லது.