தொழில்நுட்பம்

ஏ.எஸ்.யு.எஸ். மார்ஷ்மெல்லோ கீபோர்டு, மவுஸ் அறிமுகம்

கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் தற்போது மார்ஷ்மெல்லோ கே டபிள்யூ 100 என்ற பெயரில் கீபோர்டையும், எம்.டி. 100 என்ற பெயரில் மவுஸையும் அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டுமே வயர்லெஸ் (வயர் இணைப்பில்லாதது) முறையில் செயல்படுபவை. ஒரே சமயத்தில் மூன்று சாதனங்களில் இணைக்கும் வசதி கொண்டவை.

விண்டோஸ், குரோம் ஓ.எஸ்., மேக் ஓ.எஸ்., ஐ.ஓ.எஸ். இயங்குதளம் கொண்ட கம்ப்யூட்டரில் இணைத்து செயல்படுத்தலாம். லேப்டாப்பில் உள்ள கீபோர்டு போன்ற வடிவமைப்பைக் கொண்டிருப்பதால் இதைக் கையாள்வது மிகவும் எளிதானது. கீ போர்டின் விலை சுமார் ரூ.2,899. மவுஸ் விலை சுமார் ரூ.1,499.

SCROLL FOR NEXT