ஆட்டோமொபைல்

3 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் அற்புதம்; ஆண்ட்ராய்டு ஒன்பிளஸ் என்6 லைட் 4ஜி

7,000 எம்.ஏ.எச். பேட்டரியுடன் 15 வாட்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் பேட்டரி நீடிக்க வேண்டும் என்பவர்களுக்காக 7,000 எம்.ஏ.எச். பேட்டரியுடன் ஒன்பிளஸ் என் லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதில் 6.75 அங்குல எச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரை, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 900 நிட்ஸ் பிரகாசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஈரமான கைகளாலும் திரையைப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

யூனிசாக் டி7250 சிப் செட் மூலம் செயல்படும் இந்த போனில், 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. சேமிப்புத் திறன் உள் ளன. நினைவக அட்டையைப் பயன்படுத்தி சேமிப்புத் திறனை 2 டி.பி. வரை அதிகரிக்கலாம். பின்புறத்தில் 13 மெகாபிக் சல் முதன்மைக் கேமராவும், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளன. செயற்கை நுண்ணறிவு வசதி மூலம் புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்கவும். முகங்களின் தெளிவை மேம்படுத்தவும் முடியும்.

7,000 எம்.ஏ.எச். பேட்டரியுடன் 15 வாட்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற சாதனங்களுக்கும் சார்ஜ் வழங்க 5 வாட்ஸ் எதிர்மின்னேற்ற வசதியும் உள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 3 நாட்கள் வரை பயன்படுத்த லாம் என்றும், பேட்டரியின் செயல்திறன் 6 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓ.எஸ். 16 இயங்குதளத்தில் செயல்படும் இந்த போனில், கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவு வசதியும் உள்ளது. தூசி மற்றும் நீர் தெறிப்பிலிருந்து பாதுகாக்கும் ஐ.பி.64 தரச் சான் றும், ராணுவத் தர உறுதித்தன்மையும் வழங்கப்பட்டுள்ளன. 215 கிராம் எடை கொண்ட இந்த போன், நீயோ கிரீன், மிட் நைட் ஹைப் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.15,999 முதல் ரூ.16,999 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT