Automobile

புதிய கார்களுக்கு 2029-ம் ஆண்டு முதல் ‘பி.எஸ்-7’ மாசு கட்டுப்பாட்டு விதி அமல்

இந்த புதிய விதிகளால் நச்சு வாயுக்களின் வெளியீடு பெருமளவு குறைக்கப்படும்.

புதுடெல்லி,

இந்தியாவில் வாகனப்புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்க, புதிய கார்கள் மற்றும் எஸ்.யு.வி. ரக வாகனங்களுக்கு அடுத்த கட்ட தீவிர 'பி.எஸ்-7' மாசு கட்டுப்பாட்டு விதிகளை அறிமுகம் செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்த புதிய விதிகள் 2029-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் தொடங்கி, 2035-ம் ஆண்டு ஏப்ரல் வரை 3 கட்டங்களாக 6 ஆண்டுகளுக் குள் முழுமையாக அமல்படுத்தப்படும். இதில் 2-வது கட்டம் 2031-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும். இந்த புதிய விதிகளால் நைட்ரஜன் ஆக்சைடு, பர்டிகுலேட் மேட்டர் போன்ற நச்சு வாயுக்களின் வெளியீடு பெருமளவு குறைக்கப்படும்.

எனினும், தற்போது புழக்கத்தில் உள்ள 'பி.எஸ்-6' வாகனங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அவற்றின் ஆயுட்காலம் வழக்கம்போல் தொடரும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பி.எஸ்-6 விதிகள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT