புதுடெல்லி,
நாடு முழுவதும் மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை குறுகிய காலத்தில் டெலிவரி செய்யும் நிறுவனமாக ஜெப்டோ உள்ளது. இந்த நிறுவனம் மூலம் ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) போன்ற பாரம்பரிய மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எனவே இந்த நிறுவனத்துடன் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய பாரம்பரிய மருந்துகளின் தரம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை உறுதி செய்யவும், டிஜிட்டல் முறையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக ஆயுஷ் மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் கூறியுள்ளார்.
இந்தியாவின் பாரம்பரிய மருந்துகளை நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பதற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இவை ஒத்துப்போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.