சினிமா துளிகள்

கொரோனாவால் சம்பளம் குறைப்பு; பட அதிபர்களை சாடிய நடிகை

கொரோனா பரவல் காரணமாக நடிகைகளிடம் சம்பளத்தை குறைத்து கொள்ளும்படி வற்புறுத்துவதாக, பட அதிபர்களை பூமி பட்னேகர் சாடி உள்ளார்.

பிரபல இந்தி நடிகை பூமி பட்னேகர். இவர் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்த டாய்லட் படம் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 3 இந்தி படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நடிகைகளிடம் சம்பளத்தை குறைத்து கொள்ளும்படி வற்புறுத்துவதாக, பட அதிபர்களை பூமி பட்னேகர் சாடி உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கொரோனா பரவல், நடிகைகள் சம்பளத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நடிகர்கள் வழக்கம்போல் சம்பளம் வாங்குகிறார்கள். நடிகைகளிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பாளர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆனால் நடிகர்களிடம் இந்த கோரிக்கையை அவர்கள் முன் வைப்பது இல்லை. என்னுடன் நடித்த எந்த நடிகரிடமும் சம்பளத்தை குறைக்கும்படி அவர்கள் சொன்னது இல்லை. ஆனால், நடிகைகள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்கிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்றார்.

SCROLL FOR NEXT