சினிமா துளிகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி fake ஷோ - கஸ்தூரி காட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சி பேக் ஷோ என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

தினத்தந்தி

90-களின் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்துவைத்திருந்தார். இவர் சமீபத்தில் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் தொடங்கியுள்ளது. இதில் கடந்த 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீண்டும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கஸ்தூரி இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்நிகழ்ச்சியில் அவர் இடம் பெறவில்லை. ஏன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கஸ்தூரியிடம் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து காட்டமாக பதிலளித்துள்ளார்.


அந்த பதிவில் அவர் கூறியிருப்பது, "எனக்கு குடும்பம் இருக்கு, வேலைகள் நிறைய இருக்கிறது. இந்த நச்சுதன்மை வாய்ந்த நிகழ்ச்சிக்கு வர நேரம் இல்லை. குறிப்பாக இந்த போலி நிகழ்ச்சிக்கு பின்னால் பணத்துக்காக ஓட முடியாது. உங்கள் எதிர்பார்ப்பை வேறு எங்கேயாவது கொண்டு செல்லுங்கள்" என கஸ்தூரி பதில் அளித்திருந்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை