தலைப்புச் செய்திகள்

டெல்லியில் பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடக்கிறது.

இதில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, லோக் ஜனசக்தி, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்கிறார்கள்.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது நாடாளுமன்ற தொடருக்கான அரசின் செயல் திட்டங்கள் மற்றும் அரசியல், நிர்வாகம் தொடர்பான விவகாரங்கள் குறித்து பேசுவார் என தெரிகிறது.