புதுச்சேரி

தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

கோட்டுச்சேரி

நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கொழு கொழு குழந்தை போட்டி நடைபெற்றது. மருத்துவ அதிகாரிகள் ஹரிமதி, லாவண்யா ஆகியோர் தலைமை தாங்கினர். ரெட் கிராஸ் சொசைட்டி துணை தலைவர் சோழ சிங்கராயர், நிர்வாகக்குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை தலைவர் டாக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து பேசினார். தொடர்ந்து கொழு கொழு குழந்தை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர்கள், தாய்மார்கள், கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து