தலைப்புச் செய்திகள்

இன்று பட்ஜெட் தாக்கல்: மாநில அரசுகள் பதற்றத்துடன் காத்திருக்கின்றன - காங்கிரஸ்

கொள்கை உருவாக்குவதில் ஒருங்கிணைப்பு இல்லாததையே இது காட்டுகிறது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பட்ஜெட் தொகையில் பெரும்பகுதி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதமாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் 26 நாட்கள் கழித்து, அதாவது பிப்ரவரி 27-ந் தேதி, புதுப்பிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வரிசை வெளியிடப்படும். அப்படியானால் பட்ஜெட் தொகை மாற்றம் செய்யப்படுமா? மொத்த விலை குறியீட்டு எண்ணும் மாற்றத்துக்கு உள்ளாகும். கொள்கை உருவாக்குவதில் ஒருங்கிணைப்பு இல்லாததையே இது காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.