புதுச்சேரி

பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

பிரிந்து சென்ற மனைவி சேர்ந்து வாழ வராததால் விரக்தி அடைந்த பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

கோட்டுச்சேரி

பிரிந்து சென்ற மனைவி சேர்ந்து வாழ வராததால் விரக்தி அடைந்த பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பல பெண்களுடன் தொடர்பு

அம்பகரத்தூர் அருகே உள்ள நல்லம்பல் கிராமத்தை சேர்ந்தவர் மிதுன் என்கிற மதன்ராஜ் (வயது 36). தனியார் பஸ் கண்டக்டர். இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார்.

இதை அவரது மனைவி சரஸ்வதி (30) கண்டித்தார். இருப்பினும் மதன்ராஜ், பெண்களுடன் பேசுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு சரஸ்வதி தனது குழந்தைகளுடன், அரங்க நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மேலும் கணவரின் செயல்பாடுகள் குறித்து திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் சரஸ்வதி புகார் செய்தார். பதிலுக்கு மனைவி, வேறு யாருடனோ செல்போனில் அடிக்கடி பேசுவதாக கூறி சரஸ்வதி மீது மதன்ராஜ் புகார் தெரிவித்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று சரஸ்வதியின் தாய் வீட்டுக்கு குடிபோதையில் சென்ற மதன்ராஜ், "தன்னுடன் சேர்ந்து வாழ வீட்டுக்கு வரும்படி'' மனைவியை அழைத்துள்ளார். ஆனால் சரஸ்வதி அவருடன் செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியுடன் வீட்டுக்கு சென்ற மதன்ராஜ், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த புகாரின்பேரில் திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து