ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த மாதம் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் 31.72 லட்சம் வாகனங் கள் பதிவாகி உள்ளன.இதில் 23 லட்சத்து 21 ஆயிரத்து 419 இருசக்கர வாகனங்கள், 1 லட்சத்து 41 ஆயிரத்து 420 ஆட்டோக்கள், 5 லட்சத்து 7 ஆயிரத்து 768 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 79 ஆயி ரத்து 285 டிராக்டர்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து 140 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் உள்பட 31 லட்சத்து 72 ஆயிரத்து 466 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம் பர் மாதம் 25 லட்சத்து 36 ஆயிரத்து 920 வாகனங்கள் பதிவாகியிருந்தன. இதன்மூலம் கடந்த அக்டோபர் மாதம் 25.05 சதவீத வாகனங்கள் கூடுதலாக பதிவாகியிருக்கின்றன.
நவராத்திரி பண்டிகை நாட்களில் மட்டும் அதாவது கடந்த மாதம் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 76 ஆயிரத்து 515 இருசக்கர வாகனங்கள், 28 ஆயிரத்து 262 ஆட்டோக்கள், 1,303 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள். 13 ஆயிரத்து 349 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள் உள்பட 1 லட்சத்து 19 ஆயிரத்து 429 வாகனங்கள் பதிவாகியிருந்தன. இது கடந்த ஆண்டில் (2025) 92 ஆயிரத்து 629 ஆக இருந்தது. அந்தவகையில் இது 28.93 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்த ஆண்டில் அக்டோபர் மாதம்தான் நாடு முழுவதும் அதிகபட்ச வாகனங்கள் பதிவாகியிருந் ததாக, ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சாய் கிரிதர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 326 இருசக்கர வாகனங்கள், 4 ஆயிரத்து 914 ஆட்டோக்கள், 8 ஆயிரத்து 484 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள், 31 ஆயிரத்து 249 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 2 ஆயிரத்து 781 டிராக்டர் உள்பட சுமார் 2 லட்சம் வாகனங்கள் பதிவாகியிருக்கின்றன.