வணிகம்

நாடு முழுவதும் பண்டிகைக் காலத்தில் 55¾ லட்சம் வாகனங்கள் பதிவு

நாடு முழுவதும் பண்டிகை காலமாக கருதப்படும் 42 நாட்களில் மட்டும் 55 லட் சத்து 25 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண் டைவிட 23.95 சதவீதம் அதிகம் ஆகும்.

வாகனங்கள் பதிவு

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, பண்டிகை காலங்களாக கருதப்படும் கடந்த மாதம் 11-ந்தேதி முதல் கடந்த 21-ந்தேதி வரையிலான 42 நாட்களில் நாடு முழுவதும் பதிவாகிய வாகனங்களின் விவரங்களை வெளியிட் டுள்ளது.அதன்படி, 43 லட்சத்து 13 ஆயிரத்து 276 இருசக்கர வாகனங்கள், 1 லட்சத்து 93 ஆயிரத்து 576 ஆட்டோக்கள், 1 லட்சத்து 55 ஆயிரத்து 761 வணிக பயன்பாட்டுக் கான வாகனங்கள், 7 லட்சத்து 48 ஆயிரத்து 616 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 1 லட்சத்து 3 ஆயிரத்து 809 டிராக்டர்கள் உள்பட 55 லட்சத்து 25 ஆயிரத்து 490 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.முந்தைய ஆண்டு (2025) பண்டிகை காலங்களில் 54 லட்சத்து 5 ஆயிரத்து 956 வாகனங்கள் பதிவாகியிருந்தன. இதோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு 23.95 சத வீத வாகனங்கள் அதிகம் பதிவாகியிருக்கிறது.

மின்சார வாகனங்கள்

அதேபோன்று நடப்பாண்டு பண்டிகை காலங்களில் 5 லட்சத்து 9 ஆயிரத்து 667 மின்சார வாகனங்கள் பதிவாகியிருக்கிறது. முந்தைய ஆண்டு இது 3 லட்சத்து 33 ஆயிரத்து 935 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு பதிவா கிய மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 67.55 சதவீதம் அதிகம் ஆகும்.

இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சாய் கிரிதர் கூறுகையில், "நடப்பாண்டு 42 நாட்கள் பண்டிகை காலங்களில் வாகனங்களின் பதிவு புதிய உயரத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது" என்றார்.

SCROLL FOR NEXT