நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி தொழில்துறை குழுமங்களில் ஒன்றாக அதானி குழுமம் திகழ்கிறது. துறைமுகங்கள், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விமான நிலையங்கள், சரக்கு கையாளுதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல முக்கிய துறைகளில் வலுவான முதலீடுகள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது.
தற்போது நாட்டின் செயற்கை நுண்ணறிவுத்துறை வளர்ச்சிக்காக ரூ.9 லட்சம் கோடி (100 பில்லி யன் அமெரிக்க டாலர்கள்) முதலீடு செய்வதாக அதானி குழுமம் உறுதியளித்துள்ளது. 2035-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கக்கூடிய உலகின் மிகப்பெரிய ஏ.ஐ. தரவு மையத்தை அமைக்கும் வகையில் இந்த முதலீடு ஈட்டப்பட்டுள்ளதாக அதானி குழுமத்தின் சேர்மன் கவுதம் அதானி அறிவித்துள்ளார்.