செயல் தலைவராக நியமனம்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக என்.சந்திரசேகரனை 3-வது முறையாக நியமித்து கடந்த செப்டம்பர் 17-ந்தேதி இயக்குனர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் ஆர்.டி. டாடா அறக்கட்டளை ஆகியவை மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
பெரும்பான்மை அறங்காவலர்களின் ஒப்புதல் இன்றி நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், முறையே ரூ.50 கோடி மற்றும் ரூ.15 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட் டிருந்தது. மேலும், வருகிற 30-ந்தேதி(நாளை) நடைபெற உள்ள இயக்குனர் குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் அல்லது சந்திரசேகரன் வாக்களிக்க தடை விதிக்கவேண்டும் என இடைக்கால நிவாரணமும் கோரப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி அபய் அகுஜா, சந்திரசேகரனின் 3-வது பதவிக்காலம் 30-ந்தேதி தொடங்கப்போவதில்லை. அவர் ஏற்கனவே செயல் தலைவராகத்தான் உள்ளார். எனவே, கூட்டத்தை ஒத்திவைக்கவோ அல்லது அவர் வாக்களிக்க தடை விதிக்கவோ அவசியமில்லை. 30-ந்தேதி கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறட்டும்.அதில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட் டுப்பட்டதாகும்" என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.