வணிகம்

ஈரான் போர் எதிரொலி; சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சி

ஈரான் போரால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையும், சர்வதேச தேவை மற்றும் வினியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புமே காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்

சீன சுங்க அமைப்பு, மார்ச் மாதத்துக்கான சீன ஏற்றுமதி தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஏற்பட்ட 21.8 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியில் இருந்து மார்ச் மாத வளர்ச்சி சரிந்துள்ளது. இதற்கு ஈரான் போரால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையும், சர்வதேச தேவை மற்றும் வினியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புமே காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

"எதிர்பார்த்ததை விட அதிக காலத்துக்கு ஈரான் போர் நீடித்தால், ஒட்டுமொத்த தேவையில் சரிவு ஏற்பட்டு இன்னும் பாதிப்பு அதிகரிக்கும்" என்று பேங்க் ஆப் அமெரிக்கா நிபுணர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மார்ச் மாத ஏற்றுமதி 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.