தங்கம்

தங்கம் விலை 2-வது நாளாக உயர்வு... இன்றைய நிலவரம் என்ன...?

தொடர் விலை சரிவால் நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை,

தொடர் விலை சரிவை சந்தித்த தங்கம் விலை 2-வது நாளாக இன்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை..

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை, அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. குறிப்பாக, கடந்த 10-ந்தேதியில் இருந்து தங்கம் விலை இறங்குமுகத்திலேயே இருந்து வந்தது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 465-க்கும், ஒரு பவுன் ரூ.91 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர் விலை சரிவால் நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ‘தங்கம் வாங்க இதுவே சரியான நேரம். எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து நகைகளை வாங்கிவிடலாம்' என்று அவர்கள் ஆவலுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

2-வது நாளாக உயர்வு

அவர்களின் எதிர்பார்ப்பிற்கு அதிர்ச்சி கொடுப்பது போல் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, நேற்று கிராமுக்கு ரூ.135-ம், பவுனுக்கு ரூ.1,080-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.115-ம், பவுனுக்கு ரூ.920-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 715-க்கும், ஒரு பவுன் ரூ.93 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2 நாட்களில் தங்கம் பவுனுக்கு 2,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

அதேநேரம், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT