சென்னை,
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையில் இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் விலை அதிகரித்து இருந்த சூழலில், நேற்று விலை குறைந்து இருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 860-க்கும், ஒருசவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் -அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்தம் உடன்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் தங்கம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
08.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600 (இன்று)
07.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880 (நேற்று)
06.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,920
05.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600
04.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,800