கோப்புப்படம் 
தங்கம்

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில், இன்று மாற்றமின்றி விற்பனையாகிறது.

சென்னை,

தங்கம் விலை மளமளவென சரிந்து வந்த நிலையில், கடந்த 24-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்து இருந்தது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.480-ம், கிராமுக்கு ரூ.60-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,195-க்கும், விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,195-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.215-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT