தங்கம்

காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை.. தற்போதைய நிலவரம்?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்த நிலையில் இன்று காலை குறைந்தது.

சென்னை,

தங்கம் விலை 

தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணித்து வருகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து பதிவானது. அதன் பின்னர் சற்று குறைந்த தங்கம் விலை 27-ந்தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து தினமும் புதிய உச்சத்தை தொட்டது.

அந்த வகையில் தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.240-ம், மாலையில் ரூ.480-ம் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.87,600-க்கும், ஒரு கிராம் ரூ.10,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலை நிலவரம் 

தொடர்ந்து விலை அதிகரித்து வந்த தங்கம் விலை, இன்று காலை சரிவை சந்தித்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.163-க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று மாலை நிலவரம் 

இந்த நிலையில், காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் அதிகரித்தது. அதன்படி, தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.87,600-க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,950-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்;

02.10.2025 ஒரு சவரன் ரூ.87,600 (இன்று மாலை)

02.10.2025 ஒரு சவரன் ரூ.87,040 (இன்று காலை)

01.10.2025 ஒரு சவரன் ரூ.87,600 (நேற்று)

30.09.2025 ஒரு சவரன் ரூ.86,880

29.09.2025 ஒரு சவரன் ரூ.86,160

27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120