சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 14,170-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.