கோப்புப்படம் 
தங்கம்

தங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கம் முதல் ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக குறைந்தது. மொத்தமாக நேற்று சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,760-க்கும், ஒரு கிராம் ரூ.13,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,685-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் 11-வது நாளாக இன்றும் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT