தங்கம்

ஓராண்டுக்குப் பிறகு ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சென்னை,

சுமார் ஓராண்டுக்குப் பிறகு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

தொடர்ந்து குறைவு

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 615-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 920-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் குறைந்தது. அதன்படி தங்கம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 540-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 320-க்கும் விற்பனையானது.

கடந்த 9-ந்தேதி தங்கம் பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 40 ஆக இருந்தது. தற்போது ரூ.5,720 குறைந்து ரூ.1 லட்சத்து 320 ஆக சரிந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் நேற்று குறைந்திருந்தது. ஒரு கிராம் ரூ.190-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஓராண்டுக்குப் பிறகு...

இந்த நிலையில், சுமார் ஓராண்டுக்குப் பிறகு ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.99,760-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,470-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை இன்று மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.190-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவில் நிலவக்கூடிய பணவீக்கம், டாலரின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களும், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை வீழ்ச்சியாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT