கோப்புப்படம் 
தங்கம்

தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

சென்னை,

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, நேற்று உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,180-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.