கோப்புப்படம் 
தங்கம்

தங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.2,360 குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 6-ந்தேதியில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. 6-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து, கடந்த 24-ந்தேதி ரூ.1,20,240-க்கு விற்பனையானது. இப்படியாக விலை உயர்ந்து வந்த சூழலில், அதன் பின்னர் சற்று குறையத் தொடங்கியது.

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.135 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.