கோப்புப்படம் 
தங்கம்

தொடர் சரிவில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.760 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்து குறைந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.760-ம், கிராமுக்கு ரூ.95-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,720-க்கும், ஒரு கிராம் ரூ.13,590-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.75 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கடந்த 12 நாட்களாக மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT