சென்னை,
தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360-ம், கிராமுக்கு ரூ.45-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,680-க்கும், ஒரு கிராம் ரூ.13,210-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.