கோப்புப்படம் 
தங்கம்

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.520-ம், கிராமுக்கு ரூ.65-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,040-க்கும், ஒரு கிராம் ரூ.13,880-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் வார தொடக்கத்தில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் 10-வது நாளாக மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT