தங்கம்

தங்கம் விலை அதிரடி குறைவு.. இன்றைய நிலவரம் என்ன...?

2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னை,

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை, அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. குறிப் பாக, கடந்த 10-ந்தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்திலேயே இருந்து வந்தது. இதன் காரணமாக, நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 'தங்கம் வாங்க இதுவே சரியான நேரம். எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து நகைகளை வாங்கி விடலாம்' என்று அவர்கள் ஆவலுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில், கடந்த 23 மற்றும் 24-ம் தேதிகளில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.115-ம், பவுனுக்கு ரூ.920-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 715-க்கும், ஒரு பவுன் ரூ.93 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில், 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.295-ம், பவுனுக்கு ரூ.2,360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 420-க்கும், ஒரு பவுன் ரூ.91 ஆயிரத்து 360-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 2 நாட்கள் ரூ.2,000 அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.2,360 சரிந்துள்ளது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கும் ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT