கோப்புப்படம் 
தங்கம்

தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்தது... நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், தற்போது மேலும் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடித்தது.

இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560-ம், கிராமுக்கு ரூ.70-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,940-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் 14,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளியை பொறுத்த வரையில் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.