சென்னை,
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 10-ம் தேதி முதல் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இதனால் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. தொடர்ந்து சரிந்து கடந்த 21-ந்தேதி சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு கீழ் சென்றது. இதனால் தங்கம் சவரன் ரூ. 90 ஆயிரத்திற்கு கீழ் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கியது. அந்த வகையில், கடந்த 23-ந்தேதி தங்கம் சவரன் ரூ.1,080 உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக 24ம் தேதி சவரன் ரூ.920 அதிகரித்தது. இந்த இரு நாட்களில் சவரன் ரூ. 2 ஆயிரம் உயர்ந்தது.
ஆனால், நேற்று முன் தினம் தங்கம் கிராமுக்கு ரூ.295-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 360-ம் சரிந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 420-க்கும். ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.120-ம், சவரன் ரூ.960-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேவேளை, வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (நவ. 27) தங்கம் கிராமிற்கு ரூ. 60 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 11,600க்கும், சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 92 ஆயிரத்து 800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமிற்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 170க்கும், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்ந்து ஒருகிலோ வெள்ளி ரு. 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.