தங்கம்

தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.

சென்னை,

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

தங்கம் விலை

அதன்படி சென்னையில் கடந்த 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360-ம், 3-ந்தேதி சவரனுக்கு ரூ.200-ம், 4-ந்தேதி சவரனுக்கு ரூ. 2,200-ம், 5-ந்தேதி சவரனுக்கு 2,488-ம் உயர்ந்து இருந்தது.

இதனை தொடர்ந்து 6ம் தேதி சவரனுக்கு ரூ.1,960 குறைந்து, ஒரு சவரன் ரூ. 105,120-க்கும், கிராமுக்கு ரூ.245 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,140-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேவேளை, 7ம் தேதி மீண்டும் அதிகரித்த தங்கம் சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,05,280க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ. 20 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (09.11.2026 - திங்கட்கிழமை) மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,06,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.95 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் இன்று (09.11.2026 - திங்கட்கிழமை) ஒரு கிராம் வெள்ளி ரூ. 205-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,05,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT