சென்னை,
தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், வார இறுதியில் சற்று உயர்ந்தது. அதன்படி நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80-ம், கிராமுக்கு ரூ.10-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,04,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,070-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வார தொடக்கமான இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,04,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.