கோப்புப்படம் 
தங்கம்

மேலும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், வார இறுதியில் சற்று உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.120-ம், கிராமுக்கு ரூ.15-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,04,680-க்கும், ஒரு கிராம் ரூ.13,085-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் 3-வது நாளாக இன்றும் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT