கோப்புப்படம் 
தங்கம்

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.2,480 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த வார தொடக்கத்தில் உயர்ந்து வந்த நிலையில், வார இறுதியில் அதிரடியாக குறைந்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.2,480-ம், கிராமுக்கு ரூ.310-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT