சென்னை,
தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 10-ந்தேதியில் இருந்து குறைந்து கொண்டே வந்தது. இதனால் ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. தொடர்ந்து சரிந்து கடந்த 21-ந்தேதி ரூ.92 ஆயிரத்துக்கு கீழும் சென்றது. இப்படியாக மேலும் விலை குறைந்து ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிடும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
கடந்த 23-ந்தேதி நிலைமை அப்படியே மாறியது. என்ன வேகத்தில் இறங்கியதோ? அதே வேகத்தில் ஏற்றம் காணத் தொடங்கியது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.1,080 உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.920 அதிகரித்தது. 23, 24-ந்தேதிகளில் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்தது. இனி குறையுமா? மீண்டும் ஏறுமா? என சந்தை நிலவரத்தையே ஒரு குழப்பத்துக்கு தங்கம் விலை நிலவரம் தள்ளிவிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.295-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 360-ம் சரிந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 420-க்கும். ஒரு பவுன் ரூ.91 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 23, 24-ந்தேதிகளில் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் ஏற்றம் கண்டு, நேற்று ஒரே நாளில் ரூ.2,360 குறைந்தது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.120-ம், பவுனுக்கு ரூ.960-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும். ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.165-க்கும். ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.